எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் பாஜக பலத்தை எதிர்க்கொள்ள முடியாது.. சொல்கிறார் தமிழிசை
எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் பாஜகவின் பலத்தை எதிர்க்கொள்ள முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை: எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் பாஜகவின் பலத்தை வெல்ல முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் அவரது கார் மீதும் கறுப்புக்கொடியை வீசினர்.
இதுதொடர்பாக 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

வேண்டுமென்றே விமர்சனம்
அப்போது மாநில ஆளுநரை அரசியல் ஆதாயத்திற்காக விமர்சிக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். நாமக்கல்லில் மக்கள் நலனுக்காகத்தான் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். மாநில ஆளுநரை அரசியல் ஆதாயத்திற்காக வேண்டுமென்றே விமர்சனம் செய்கிறார்கள்

ஸ்டாலின் உள்நோக்கம்
திமுகவினர் தங்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை திரும்ப பெற வேண்டும். மக்கள் நலனில் விருப்பம் இல்லாமல் ஸ்டாலின் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்.

பெங்களூருக்கு நடைப்பயணம்
அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு குறைகளை கண்டுபிடிப்பதில் மட்டுமே ஸ்டாலின் முயற்சி செய்கிறார் . உண்மையான மக்கள் நலன் என்றால் திமுகவினர் பெங்களூருக்குதான் நடைபயணம் செல்ல வேண்டும்.

பெரிய திட்டம் என்ன?
திமுக ஆட்சியில் கொண்டுவர முடியாத எய்ம்ஸ் மருத்துவமனையை பாஜக ஆட்சி கொண்டுவந்துள்ளது. திமுக- காங்கிரஸ் கட்சியின் 10 வருட கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு கொண்டு வந்த பெரிய திட்டம் என்ன?

ஸ்டாலின் தடையாக உள்ளார்
தமிழகத்திற்கு எந்த வளர்ச்சி திட்டமும் வரக்கூடாது என்பதில் ஸ்டாலின் குறியாக உள்ளார். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஸ்டாலின் தடையாக உள்ளார்.

பாஜகவை எதிர்கொள்ள முடியாது
எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்தாலும் பாஜகவின் பலத்தை எதிர்கொள்ள முடியாது. கமல் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைத்தாலும் மக்கள் மனதில் அங்கீகாரம் கிடைக்காது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications