ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டவர் ஜெயலலிதா: ஸ்டாலின் தாக்கு
தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் குறித்து ஜெயலலிதா தவறான தகவலை அளித்து வருகிறார் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி பொருளாளர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் 90 சதவீத பணிகளை நிறைவேற்றியது திமுக. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அந்த பணிகளை கிடப்பில் போட்டவர் தான் ஜெயலலிதா.
பின்னர் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டபோது, ஏனோதானமாக நிறைவேற்றியதாக தெரிவித்தார். மேலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து ஜெயலலிதா தவறான தகவலை அளித்து வருகிறார் என குற்றம்சாட்டினார். திமுக ஆட்சி அமைந்ததும் இரண்டு மாதங்களுக்குள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
தமிழத்தில் தொழில் வளர்ச்சியை பற்றி கவலைப்படாதவர் ஜெயலலிதா. தமிழகத்தில் இருந்து பக்கத்து மாநிலங்களுக்கு தொழில் நிறுவனங்கள் வெளியேறுகி்ன்றன. தொழில் வளர்ச்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications