விருத்தாச்சலம் வேட்பாளர் மாற்றம்... பிரசாரத்தை ரத்து செய்த ஸ்டாலின்
விருத்தாச்சலம்: விருத்தாசலம் திமுக வேட்பாளர் மாற்றம் காரணமாக நேற்று நடைபெற இருந்த மு.க.ஸ்டாலினின் பிரசாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்கான திமுக வேட்பாளராக தங்க.ஆனந்தன் அறிவிக்கப்பட்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை 5 மணிக்கு தங்க.ஆனந்தனை ஆதரித்து விருத்தாசலம் பாலக்கரை, திலீபன் சதுக்கத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட இருந்தார்.

இந்த நிலையில், விருத்தாச்சலம் தொகுதி திமுக வேட்பாளர் தங்க.ஆனந்தன் திடீரென மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கடலூர் மேற்கு மாவட்ட திமுக பொருளர் பாவாடை கோவிந்தசாமி இந்த தொகுதிக்கான புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, தங்க.ஆனந்தனை ஆதரித்து நடைபெற இருந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க திரண்டிருந்த திமுகவினர், வேட்பாளர் மாற்றத்தை அறிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, திமுக நிர்வாகிகள் சிலர் வேட்பாளர் திடீர் மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேடையில் விமர்சித்துப் பேசினர்.
இந்த நிலையில், விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்த மு.க.ஸ்டாலின், புறவழிச் சாலை வழியாக நெய்வேலிக்குச் சென்றார். இதனால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications