234 தொகுதியிலும் திமுக வெல்லும்... ஸ்டாலின் உற்சாகம்
சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில், வெயில் மற்றும் மழை பயம் காரணமாக பெரும்பாலான முக்கிய தலைவர் அதிகாலையிலேயே வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடிக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி மற்றும் மருமகள் என குடும்பத்தினருடன் வந்திருந்தார். வாக்களிக்க பிரபலங்களுக்கு என தனி வரிசை இல்லாததால், பொதுமக்களுடன் அவரும் வரிசையில் நின்று, தனது வாக்கைப் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், "இத்தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிரான அலையும், திமுகவிற்கு ஆதரவு அலையும் வீசுகிறது. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதனால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 234 தொகுதியிலும் வெற்றி பெறும்" என்றார்.
முன்னதாக, இன்று காலை வாக்குப்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சாரதா நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications