63வது பிறந்த நாள்... கருணாநிதியிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின்... தலைவர்கள் வாழ்த்து
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 623து பிறந்த நாளையொட்டி தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றார். ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலினுக்கு இன்று 63வது பிறந்த நாளாகும். இதையொட்டி நேற்று மாலை சென்னை பெரியார் திடலில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. குஜராத் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஆர். கோபாலகிருஷ்ணன் தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், சுப.வீரபாண்டியன், தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் பா.விஜய் உள்ளிட்டோர் பங்கேற்று ஸ்டாலினை வாழ்த்திப் பேசினர். நக்கீரன் ஆசிரியர் கோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இன்று கருணாநிதியிடம் வாழ்த்து
இந்த நிலையில் பிறந்த நாளான இன்று தனது வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடினார் ஸ்டாலின். அதன் பின்னர் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி..ஏ மைதானத்திற்கு வந்த அவர் அங்கு தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார்.
முன்னதாக கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து ஸ்டாலின் ஆசி பெற்றார். பிறந்த நாளையொட்டி ஸ்டாலினுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி, குமரி அனந்தன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்பட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எஸ்.வி.சேகர் நேரில் வாழ்த்து
முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகர் நே்ரில் வந்து ஸ்டாலினுக்கு இனிப்பு கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அதே இனிப்பை சேகருக்கு எடுத்து ஊட்டி விட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications