திருச்சி ஆர்.எம்.ஓ. தற்கொலை முயற்சி... விஜயபாஸ்கர்தான் காரணமாமே... ஸ்டாலின் சந்தேகம்
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஊழியர்கள் கொடுத்த துன்புறுத்தல் தாங்க முடியாமல் திருச்சி அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ நேரு தற்கொலை செய்து கொள்ள முனைந்தார் என்று வந்துள்ள செய்திகள் கவலைக்குறியதாகவும், வேதனையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் கூறுகையில், வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் அறிவொளி தற்கொலைக்குப் பிறகு இப்போது திருச்சி அரசு பொது மருத்துமனை அசோசியேட் ப்ரபஸர் நேரு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் திருச்சி அரசு மருத்துமனையின் ஆர்.எம்.ஓ. பொறுப்பிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஊழியர்கள் கொடுத்த துன்புறுத்தல் தாங்க முடியாமல் நேரு இப்படி தற்கொலை செய்து கொள்ள முனைந்தார் என்று வந்துள்ள செய்திகள் கவலைக்குறியதாகவும், வேதனையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
சட்டவிரோதமான காரியங்களைச் செய்யச் சொல்லி நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதில் இந்த அரசாங்கத்தில் அதிமுக அமைச்சர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிப் போய் விட்டார்கள். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவது, அமைச்சர்களின் குற்றங்களை மறைப்பது போன்றவற்றிற்காக அ.தி.மு.க. ஆட்சியின் ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் செயல்படுகிறது.
அது மட்டுமின்றி, அ.தி.மு.க. தலைமை தங்களுக்கு "கலெக்ஷன் கோட்டா" நிர்ணயம் செய்திருக்கிறது என்றும், அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் பணம் வசூல் பண்ணச் சொல்லி அதிகாரிகளை கட்டாயப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அ.தி.மு.க. பண வசூல் ஆசை நிறைவேறும் முன்பு இன்னும் எத்தனை நேர்மையான அதிகாரிகளின் தங்களின் உயிர்களை இழக்க வேண்டும்? என்று கேட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications