தொண்டர்களின் எழுச்சியை பார்க்கையில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: தொண்டர்களின் எழுச்சியை பார்க்கையில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகி இல்லத் திருமணம் இன்று சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. திருமணத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில்,
இது போன்ற சீர்திருத்த திருமணத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி. 1967ம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சுயமரியாதை சீர்திருத்த திருமணங்கள் அதிக அளவில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலக அளவில் திமுக மட்டும் தான் ஜனநாயக கட்சி ஆகும். உட்கட்சி தேர்தல் நல்ல முறையில் நடத்தப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்தபோதும் கூட கட்சியினர் உட்கட்சி தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றனர். இதை பார்த்து திமுக அழிந்துவிட்டதாக கூறியவர்கள் எல்லாம் வாயடைத்து போயினர்.
ஆளும் அதிமுகவில் தலைவரை தேர்வு செய்த பிறகே கிளை தேர்தல் நடைபெற்றது. ஆனால் திமுக ஜனநாயக கட்சி என்பதால் அடிமட்ட தேர்தலை முடித்த பிறகே தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுகவை பொறுத்த வரை யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகலாம். ஆனால் வட்ட செயலாளர் பதவிக்கு உழைப்பவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்சியில் இருக்கும் எழுச்சியை பார்க்கையில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கப் போகிறது என்று தெரிகிறது என்றார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications