கருணாநிதி பிறந்தநாள்... கன்பியூஸ் ஆன மு.க.ஸ்டாலின்... சிரித்த ஜெயலலிதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியின் வயதை தவறாக கூறி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறிய போது அவையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா மேஜையை லேசாக தட்டி சிரித்தார். சுதாரித்த மு.க. ஸ்டாலின், தந்தையின் வயதை சரியாக குறிப்பிட்டு அவைக்குறிப்பில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று 93வது பிறந்த தினத்தை கொண்டாடினார். தமிழக சட்டசபையில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்ச்சியும் நேற்று நிகழ்ந்தது.

Stalin confuse Karunanidhi birthday

சபாநாயகரை இருக்கையில் அமரச்செய்யும் வாய்ப்பு, கருணாநிதியின் மகனும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அதே நாளில் அமைந்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட மு.க.ஸ்டாலின், தனது தந்தையும் கட்சித் தலைவருமான கருணாநிதியின் பிறந்த தினம் அது என்ற தகவலை சட்டசபை பதிவுகளில் பதியச் செய்தார்.

இன்று 63வது பிறந்த நாள் காணும் திமுக தலைவர் கருணாநிதியின் சார்பிலும், பேரவை தலைவர், துணை தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி அமர்ந்தார். நேர் எதிரில் இருந்து அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதியின் வயதைக் கேட்டதும் லேசாகச் சிரித்தார்.

உடனே, துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் அவரிடம், தலைவருக்கு 93 வயது என நினைவூட்டினர்.

ஸ்டாலின் மீண்டும் எழுந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு 63 வயது என தவறுதலாக கூறிவிட்டேன், 93 வயது என்று திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கருணாநிதி பிறந்த நாள் பற்றி ஸ்டாலின் குறிப்பிட்டதும் திமுகவினர் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது முதல்வர் ஜெயலலிதாவும், மேஜை மீதிருந்த பலகையில் கைவிரலை லேசாக தட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+