12 ம் வகுப்பு பொதுத்தேர்வு: கருணாநிதி, ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வெற்றி பெற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தமிழகத்தில் உள்ள 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கிறார்கள், தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடையும் வகையிலும் அவர்களுடைய பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும், ஆசிரியர்களும் பூரிப்புக்கொள்ளும் அளவுக்கும் மாணவ, மாணவியர்கள் இந்த பொதுத் தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்ற எனது வேண்டுகோளை விடுத்து, அதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தி:
மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது.
அனைத்து மாணவ, மாணவிகளும் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்திற்கு மட்டுமல்ல- நாட்டிற்கும்- ஏன் உலகத்திற்கே வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வெற்றி பெற்று, தேசத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு பாடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications