20 நிமிடம் நடந்த சந்திப்பு.. தமிழக முதல்வரிடம் ஸ்டாலின் வைத்த 4 கோரிக்கைகள்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு நடத்திய மு.க ஸ்டாலின் மற்றும் அழகிரி, முதல்வரிடம் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு நடத்திய மு.க ஸ்டாலின், அழகிரி, முதல்வரிடம் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்.

முதல்வர் பழனிச்சாமி இல்லத்திற்கு சென்று ஸ்டாலின், அழகிரி சந்திப்பு நடத்தி இருக்கின்றனர். கருணாநிதி உடல்நிலை மோசமாக இருக்கும் நிலையில் சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பில் ஆ.ராசா, கனிமொழி, டிஆர் பாலு, ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
இந்த சந்திப்பில் சில முக்கியமான விஷயங்களை ஸ்டாலினும் மற்ற திமுகவினருக்கு முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளார். இந்த சந்திப்பு 20 நிமிடம் நடந்தது.
இந்த சந்திப்பில், முதலில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் முதல்வரிடம் விளக்கி இருக்கிறார். அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது, தற்போது அவருக்கு என்ன பிரச்சனை என்று விளக்கி உள்ளார்.
அதன்பின் காவேரி மருத்துவமனைக்கு வர இருக்கும் தலைவர்களின் விவரங்களை அளித்து உள்ளார். ஸ்டாலினிடம் ஏற்கனவே இதற்கான பட்டியல் ஒன்று அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இன்றும் நாளையும் காவேரி மருத்துவமனைக்கு முக்கிய தலைவர்கள் யாரெல்லாம் வர இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை முதல்வரிடம் அளித்த ஸ்டாலின் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கும்படி கூறியுள்ளார். ஏற்கனவே நாளை பிரதமர் மோடி வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல் ஸ்டாலின் இந்த சந்திப்பில் இன்னொரு மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார். முக்கிய அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பிரச்சனை இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு நடக்க இருக்கும் அரசு நிகழ்வுகளை தள்ளி வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். அவரது உடலில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசியுள்ளார். தமிழகம் முழுக்க கூடுதல் பாதுகாப்பு கொடுக்க அவர் கோரிக்கை வைத்து இருக்கிறார். ஏற்கனவே தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications