மருத்துவ நுழைவு தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது: ஸ்டாலின்
சென்னை: மருத்துவ கல்வியில் சேருவதற்கு அகில இந்திய அளவில் மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது:
கூட்டாட்சி என்று ஒருபுறம் கூறிக் கொண்டு இன்னொரு புறம் இது போன்ற மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலில் மத்தியில் உள்ள பா ஜ க அரசு திட்டமிட்டு ஈடுபடுவது வேதனைக்குரியது. ஏற்கனவே இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு போட்டது செல்லாது என்றும் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனாலும் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று அந்த தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்து இப்படி ஒரு தீர்ப்பை பெற்றுள்ளது இந்திய மருத்துவ கவுன்சில். மாநிலங்களின் உரிமையை பறிக்கும் இந்த அடாவடிச் செயலுக்கு மத்திய அரசும் கண்ணை மூடிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்கியது மத்திய, மாநில உறவுகளை மேம்படுத்துவதில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என்பதை எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்தது துரதிருஷ்டமானது.
அதிமுக அரசும் இந்த விஷயத்தில் எந்த விதமான அழுத்தமும் மத்திய அரசுக்கு கொடுக்காமல் இருந்து விட்டது அதை விட கொடுமையானது. திமுக அரசு 2007 ஆம் வருடமே தமிழகத்தில் இது போன்ற மருத்துவ கல்வியில் சேருவதற்கான நுழைவு தேர்வை ரத்து செய்தது என்பதை நினைவு கூறும் அதே நேரத்தில் மத்திய அரசு அகில இந்திய அளவில் மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்தும் முடிவை கிராமப்புற மாணவர்களின் நலனையும், சமூகநீதிக் கொள்கை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனையும் மனதில் கொண்டு கண்டிப்பாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications