ராஜுமுருகன் குடும்பத்துக்கு ஸ்டாலின் ஆறுதல்: ரூ.10 லட்சம் நிதி

Subscribe to Oneindia Tamil

ஏற்காட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த திமுக நிர்வாகியின் குடும்பத்தினருக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவரை குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்கூறி ரூ.10 லட்சத்திற்கான நிதியை சனிக்கிழமை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி வட்டம் தியாகதுருகம் ஒன்றியம் பொறையூரைச் சேர்ந்தவர் டி.பி.ராஜமுருகன். இவர் திமுகவில் ஒன்றிய மாணவர்அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஏற்காடு இடைத் தேர்தலில் பிரச்சாரத்துக்காக சேலம் மாவட்டம் கருமந்துறைக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் வந்திருந்த போது அங்கு பணியில் டி.பி.ராஜமுருகன் ஈடுபட்டிருந்தார்.

கடந்த திங்கள்கிழமை அதிமுக திமுக இருதரப்பினருக்குஇடையே மோதலில் திமுக கொடிக் கம்பங்கள் பிடுங்கி வீசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்து சொந்த ஊரான பொறையூருக்கு கொண்டு வந்தனர். அப்போது அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக சடலத்தை மருத்துவக் குழு அமைத்து பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவரது சடலத்தை மூன்று நாட்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் மறுபிரேத பரிசோனை செய்ய வேண்டாம் என உத்திரவிட்டிருந்தது. அதன்படி சடலத்தை வெள்ளிக்கிழமை சடலத்தை மாலை 3 மணிக்கு கொண்டு வந்து பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை 8.25 மணிக்கு அக்கிராமத்திற்கு நேரில் சென்று அவரது சடலத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உயிரிழந்த ராஜ்முருகன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தனருக்கு ஆறுதல் கூறினார்.

கட்சி தலைமை நிதியாக ரூ.2 லட்சமும், மாவட்ட நிர்வாக சார்பில் ரூ.8 லட்சம் ஆக ரூ.10 லட்சத்தினை நிதியை டிடியாக அவரது மனைவியிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஏற்காடு இடைத்தேர்தலின் போது திமுக நிர்வாகி ராஜ்முருகன் பிரத்சாரத்திற்காக வந்திருந்தார். அப்போது அதிமுகிவினர் தாக்கி உயிரிழந்தார். நீதி விசாரணை வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றது எனக் கூறினார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+