அதிமுகவுடன் ஸ்டாலினுக்கு ரகசிய உடன்பாடு: அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதிமுக உடன் ரகசிய உடன்பாடு வைத்திருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவருமான மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதுதான் இப்போது ஊடகங்களில் பரபரப்பு செய்தி. திமுகவின் சொத்துக்கணக்கில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. இதை ஒழுங்கு படுத்தாவிட்டால் திமுகவிற்குள் நடைபெறும் முறைகேடுகளை வெளியிடுவேன் என்று கொதித்தார் அழகிரி.

திமுகவின் 55 ஆண்டுகால வரலாற்றில் முக்கிய தலைவர்கள் பலர் வெளியேறியிருக்கின்றனர். சிலர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். ஆனால் கட்சித்தலைவர் கருணாநிதியின் மகனே கட்சியை விட்டு நீக்கப்பட்டு கட்சித்தலைமைக்கு தலைவலியாக மாறியிருக்கிறார். பரபரப்பான அழகிரியின் ஸ்டேட்மெண்ட்களை படியுங்களேன்.

மிரட்டி நீக்கிவிட்டனர்…

மிரட்டி நீக்கிவிட்டனர்…

கட்சிக்காரர்களை நீக்கியதற்கு நியாயம் கேட்டேன். அதற்காக என்னை தலைவரை கட்டாயப்படுத்தி, மிரட்டி என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர்.

தரக்குறைவானவர்கள்

தரக்குறைவானவர்கள்

தலைவரை நான் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக யாரோ வதந்தி கிளப்புகின்றனர். ஸ்டாலினுடன் இருப்பவர்கள் தரக்குறைவான ஆட்கள். அவர்கள் இப்படித்தான் ஏதாவது சொல்லுவார்கள்.

ஸ்டாலின் மீது நடவடிக்கை?

ஸ்டாலின் மீது நடவடிக்கை?

என்மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கும் பேராசிரியர், ஸ்டாலின் மீதான புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை.

ரகசிய உடன்பாடு

ரகசிய உடன்பாடு

அதிமுக உடன் நான் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக கூறுகின்றனர். நானா? இல்லை ஸ்டாலினா? அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்மீதும், என் மனைவி மீதும் எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஸ்டாலின் மீது வழக்கு போடப்பட்டதா?

தோல்வி பயம்

தோல்வி பயம்

அந்த அம்மாவை விமர்சித்து அல்லது அவருக்கு எதிராக ஸ்டாலின் ஏதாவது பேசியிருப்பாரா?. தலைவரின் அறிக்கையைப் பற்றித்தானே பேசுகிறார்.அவர்களுக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது. அதற்காக இப்போதே காரணத்தை சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

பிறந்தநாள் விழா

பிறந்தநாள் விழா

இந்த ஆண்டு என்னுடைய பிறந்தநாள் விழாவை வழக்கத்தை விட சிறப்பாக கொண்டாடப்போகிறேன். அதன்பின்னர் என்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுப்பேன்.

ஜனவரி 31ல் பிரளயம்

ஜனவரி 31ல் பிரளயம்

திமுகவின் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சிக்கின்றனர் அதைப்பற்றி மதுரையில் ஜனவரி 31ம் தேதி கூறுவேன்.

தனிப்பட்ட விமர்ச்சனம்

தனிப்பட்ட விமர்ச்சனம்

விஜயகாந்தை நான் தனிப்பட்ட முறையில்தான் விமர்சித்தேன். யாரோடு கூட்டணி பேசுகிறோம் என்று என்னிடம் யாரும் கூறவில்லை.

ஸ்டாலினுக்கு பதவி ஆசை

ஸ்டாலினுக்கு பதவி ஆசை

ஸ்டாலின் பதவிக்கு ஆசைப்படுகிறார். பதவிக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்.

ஸ்டாலின் தலைராகமாட்டார்

ஸ்டாலின் தலைராகமாட்டார்

திமுகவின் தலைவராக ஸ்டாலின் இருக்கமாட்டார். அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்குத்தான் அவர் தலைவர்.

மன்னிப்பா? நானா?

மன்னிப்பா? நானா?

நான் எந்தத்தவறும் செய்யவில்லை. எதற்காக மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் சேரவேண்டும் என்று கேட்டுள்ளார் அழகிரி.

கண்கள் பணிக்க… இதயம் இனிக்க…

கண்கள் பணிக்க… இதயம் இனிக்க…

அழகிரியின் எச்சரிக்கும் தொனியிலான பேட்டி பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. பிறந்தநாளை ஒட்டி அழகிரிக்கு வாழ்த்து சொல்வாரா கருணாநிதி? அல்லது கண்கள் பனித்தது.... இதயம் இனித்தது... என்பது போன்ற குடும்ப வசனத்தை கூறுவாரா கருணாநிதி என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+