சென்னை மெரினாவில் மறியல்: கைது செய்யப்பட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுதலை
மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியாக செல்வதால் சென்னை அண்ணா சாலையே முடங்கியது.
Recommended Video

சென்னை: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்ற போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் படி திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மறியல், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என நடத்தி வருகின்றனர்.

அதன்படி 5-ஆவது நாளாக இன்று அண்ணா சாலையில் மா சுப்பிரமணியன் எம்எல்ஏ மற்றும் ஜெ. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு மு.க.ஸ்டாலினும் கூட்டணி கட்சியினருமான திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்றனர்.

அங்கிருந்து அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்று வருகின்றனர். இதனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து சென்றன. ஆயிரக்கணக்கானோர் பேரணியாக செல்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஸ்டாலின் உள்ளிட்டோர் காமராஜர் சாலை அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து உழைப்பாளர் சிலை அருகே தரையில் அமர்ந்து தர்ணா ஈடுபட்டனர். அப்போது ஸ்டாலினை குண்டு கட்டாக போலீஸ் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications