விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் பாஜக செய்யவில்லை - ஸ்டாலின்
3 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் பாஜக செய்யவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய பாஜக அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஆட்சியில் இல்லாவிட்டிலும் திமுக இஸ்லாமியர்களுக்காக பாடுபட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் விருந்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறுபான்மை மக்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

3 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மை காரணமாக பாஜக அதிகார போக்குடன் செயல்படுகிறது.
மேலும் 3 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் பாஜக செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
இப்தார் விருந்தில் மாநில அரசை விட மத்திய அரசைத்தான் கடுமையாக சாடியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications