அழகிரி கூறியது போல் ஸ்டாலின் ஒரு காமெடி பீஸ் தான்...: ராமராஜன் கிண்டல்
திண்டுக்கல்: அழகிரி கூறியது திமுக பொருளாளர் ஸ்டாலின் ஒரு காமெடி பீஸ் தான் என நடிகரும், அதிமுக தலைமைக்கழக பேச்சாளருமான ராமராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால், கட்சிக் கூட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில், திண்டுக்கல் அருகே கன்னிவாடியில் நடைபெற்ற அதிமுகக் கூட்டத்தில் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

சினிமா காமெடி போல்...
அதிமுக அரசு மட்டுமே, எந்த நேரத்திலும் மக்களை சந்திக்கக் கூடியது. பிற கட்சியினர், தேர்தல் நேரத்தில் சினிமா காமெடி போல "நாங்களும் அரசியல் கட்சிகள்'தான் என பறைசாற்றிக்கொள்கின்றனர்.

தீவிரவாதத்தை ஏற்படுத்தியவர்...
மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி எனக்கூறிய விஜயகாந்த் தற்போது மாநாடு நடத்துவது கூட்டம் காட்டி பேரம் பேசுவதற்காக மட்டுமே. சினிமாவில் இதுவரை மூன்றரை லட்சம் பேரை சுட்டுக்கொன்று, இளைய சமுதாயத்திடம் தீவிரவாத கலாசாரதத்தை ஏற்படுத்தியவர் அவர்.

புரியும்... ஆனா புரியாது
இந்தி பேசும் வடமாநிலத்தவரின் தமிழைக் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் விஜயகாந்தின் பேச்சில் தெளிவு இருக்காது.

நமக்கு நாமே டூர்...
மக்களிடம் கட்சியை ஞாபகப் படுத்துவற்காகவே, ஸ்டாலின் நமக்கு நாமே "டூர்' சென்றார். சொந்த சகோ தரரை அனுசரிக்க முடியாத ஸ்டாலின், எப்படி நாட்டு மக்களையும், கட்சி தொண்டர்களையும் அனுசரித்து செல்ல முடியும்.

காமெடி பீஸ்...
அழகிரி கூறியதைப்போன்று, அவர் ‘காமெடி பீஸ்'தான். கருணாநிதியைப்போன்று மானாட மயிலாட, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி போன்ற வற்றில், ஜெயலலிதா நேரத்தை வீணடிப்பவர் அல்ல' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications