கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு ஹாங்காங் பறந்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக சூடு பறக்க தமிழகம் முழுவதும் சுற்றி வந்த தலைவர்கள் தற்போது ஆளாளுக்கு ஒரு பக்கமாக கிளம்பிப் போய்க் கொண்டுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு எஸ்டேட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார். ஆனால் அவருக்கு முன்பாக நேற்று நள்ளிரவே ஹாங்காங் கிளம்பிப் போய் விட்டார் ஸ்டாலின்.

சரிக்குச் சரி பிரசாரம்
லோக்சபா தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரிக்குச் சரியாக பிரசாரம் செய்தவர் ஸ்டாலின்.

செய்வீர்களா.. செஞ்சீங்களா
முதல்வர் ஜெயலலிதா தனது பிரசாரத்தின்போது செய்வீர்களா என்று கேட்கப் போகே அதையே பிடித்துக் கொண்டு நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சீங்களா என்று கேட்டுக் கேட்டே பிரசாரத்தை ஒரு வழியாக முடித்தார் ஸ்டாலின்.

ஹாங்காங் பயணம்
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தனது மனைவி துர்கா, மருமகள், பேரன் பேத்திகள் என ஏழு பேருடன் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார் ஸ்டாலின்.

வெற்றி வாய்ப்பு பிரகாசம்
ஹாங்காங் புறப்படுவதற்கு முன்பு தன்னை விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்களிடம் திமுகவின் வெற்றி நல்ல பிரகாசமாக இருக்கிறது. 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்றார் ஸ்டாலின்

தயாளு அம்மாள்
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாள் பெயர் சேர்த்தது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் அதுகுறித்து நீதிபதியிடம்தான் கேட்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications