தொண்டர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக ரூ.100 கொடுத்து அசத்திய மு.க.ஸ்டாலின்
சென்னை: புத்தாண்டையொட்டி தம்மை சந்திக்க வந்த திமுக தொண்டர்களுக்கு தலா ரூ 100 கொடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அசத்தினார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொது மக்கள் பலர் தங்களது குல தெய்வம் கோவிலுக்கும், இஷ்ட தெய்வ கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.இன்னும் சிலர் தங்களது தந்தை , தாய் மற்றும் குரு ஆகியோரை நேரில் சென்று வணங்கி ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதே போல, திமுக முன்னணி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து ஆசி வாங்குவது வழக்கம். இந்த முறை திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையை காரணம் காட்டி , தொண்டர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதே போல, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும், தொண்டர்கள் வரிசை கட்டி க்யூவில் நின்றனர். அதிகாலை முதலே அவரது விசுவாசிகள் கூட்டம் களைகட்டியது. தொண்டர்கள் கொண்டு வந்த அன்புளிப்புகளை ஏற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு தனது அன்பளிப்பாக ரூ.100 கொடுத்து அசத்தினார்.
இதே போல நமது கட்சி தலைவர்களும் நம்மை நேரில் சந்திக்க மாட்டார்களா என தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சி தொண்டர்களும் ஏக்கம் கலந்த குரலில் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications