கருணாநிதி ஆணையிட்டதால் அப்பல்லோ வந்தேன் - ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்ததாத எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7.10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும் வந்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 16 நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும் வந்தனர்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஓரிரு நாட்களில் முதல்வர் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அறிக்கை வந்த நிலையில், மேலும் பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று தற்போது அறிக்கை வந்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுறுத்தலின் படி மருத்துவமனைக்கு வந்தேன்.
அமைச்சர்கள், மருத்துவர்களை நேரில் சந்தித்து விசாரித்து வரவேண்டும் என்று கருணாநிதி ஆணையிட்டதால் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மருத்துவர்களிடமும் விசாரித்தேன். முதல்வர் நலம் பெற்று வருவதாக அவர்கள் கூறினர். முதல்வர் நலம் பெற்று இல்லம் திரும்பி அவரது பணியை தொடரவேண்டும் என்று எனது சார்பாகவும், திமுக சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications