அதிமுக ஆட்சியை மக்கள் புறக்கணிக்கும் காலம் வந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்
ஈரோடு:
அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி அவினாசி பேருந்து நிலையம் அருகே 12 நாளாக போராட்டக் குழுவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். போராட்டக் குழுவினரை ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் அவினாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும். ஆட்சி மாறும் சூழல் இருப்பதால் நம்பிக்கையுடன் உங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் 6 அமைச்சர்கள் இருந்தும் ஒருவர் கூட போராட்டக் குழுவினரை சந்தித்து பேசவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றம் காரணமாகவே திட்டம் கைவிடப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அவினாசி - அத்திக்கடவு திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார். சட்டசபை புறக்கணிப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, மக்கள் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications