கருணாநிதியிடம் ஆசி வாங்கிய ஸ்டாலின் - டுவிட்டரில் வாழ்த்து சொன்ன கனிமொழி
செயல் தலைவர் பதவி அறிவித்தவுடன் மு.க.ஸ்டாலின், தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோபாலபுரம் வந்து ஆசி பெற்றார்.
சென்னை: திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, தொண்டர்கள் எழுப்பிய கர ஒலியினால் அண்ணா அறிவாலயத்தில் இருந்த கலைஞர் அரங்கேமே அதிர்ந்தது. விசில் பறந்தது. பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பது போல இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்புகளில் திமுக பொதுக்குழு காட்சிகள் ஒளிப்பரப்பானது. ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டவுடன் பல நிர்வாகிகள் கண்ணீர் விட்டு அழுததுடன், உணர்ச்சி பெருக்கோடு காணப்பட்டனர்.

கருணாநிதியிடம் ஆசி
பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக சிஐடி காலனி, ராஜாத்தி அம்மாள் வீட்டில் இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று, ஆசிர்வாதம் வாங்கி சென்றார் மு.க.ஸ்டாலின்.
செயல் தலைவர் பதவி அறிவித்தவுடன் மு.க.ஸ்டாலின், தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோபாலபுரம் வந்து ஆசி பெற்றார்.
|
கனிமொழி வாழ்த்து
அப்போது கனிமொழியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, தனது அண்ணன் செயல் தலைவராக பதவியேற்றதற்கு, தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கனிமொழி பதிவிட்டுள்ளார்.
|
வழி நடப்போம்
தொடர்ந்து கனிமொழி பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டில் அவர் தொடர்ந்து தி.மு.க வை தலைவரின் பாதையில் வழி நடத்த அவருக்கு உறுதுணையாக இருப்போம். அவரைப் போல் உழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அழகிரி ரியாக்சன்
ஸ்டாலின் செயல்தலைவர் ஆனதற்கு கருணாநிதி ஆசி கொடுத்துவிட்டார். கனிமொழி வாழ்த்து கூறிவிட்டார். ஆனால் அழகிரி ரியாக்சன் என்னவென்று இன்றும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications