தமிழ் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் நா.முத்துகுமார்... ஸ்டாலின் இரங்கல்
சென்னை: மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் தமிழ் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
மஞ்சள் காமாலை மற்றும் மாரடைப்பு காரணமாக பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இன்று காலை அகால மரணமடைந்தார். இரண்டு முறை தேசிய விருதைப் பெற்ற முத்துக்குமார், 41 வயதில் மரணமடைந்ததால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று அவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் நடைபெற்றது. முத்துக்குமாரின் மரணத்திற்கு திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 'திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன்.
'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய "ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும்", 'சைவம்' படத்தில் எழுதிய "அழகே அழகே" பாடலுக்கும் தேசிய விருது பெற்ற கவிஞர். 2005- ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்று தமிழ் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கவிஞர் நா.முத்துகுமாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் பேரிழப்பு.
கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications