ஸ்டாலின் சொல்வது போல தமிழகத்திற்கு விடிவுகாலம் சீக்கிரம் வருமா?

தமிழகத்திற்கு கூடிய விரைவில் விடிவுகாலம் வரும் என்று திமுக செயல் தலைவர் சொன்ன ஜோதிடம் கூறியுள்ளார். அந்த ஜோதிடம் பலிக்குமா பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சேலம்: விரைவிலேயே தமிழகத்திற்கு நல்ல விடிவு காலம் ஏற்படுத்தி தருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் வரும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்டாலின் கூறியுள்ளார். சேலத்தில் இப்போது சொன்ன ஆருடம் பாலிக்குமா பார்க்கலாம்.

சேலத்தில் நடந்த திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், முதலில் பாஜகவை கடுமையாக சாடினார். திராவிட இயக்கம் தோன்றிய பிறகு தான் மாற்றங்கள், மறுமலர்ச்சிகள் உருவாகி உள்ளன. ஆகவே அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை, இந்த பேரியக்கத்தை இன்றைக்கு அழிக்க ஒழிக்க சமயம் பார்த்து நேரம் பார்த்து காத்து கொண்டிருக்கிற நிலைகளும் நாட்டில் உள்ளன.

எந்த கொம்பனும் தொடமுடியாது

எந்த கொம்பனும் தொடமுடியாது

அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன், திராவிட இயக்கத்தை பொறுத்தவரையிலே அவன் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, இந்த நாட்டை ஆளக் கூடியவர்களாக இருந்தாலும் சரி, எந்த கொம்பனாக இருந்தாலும் சரி, இந்த இயக்கத்தை தொட்டு கூட பார்க்க முடியாது.

கொல்லைபுற ஆட்சி

கொல்லைபுற ஆட்சி

கொல்லைப் புறமாக திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது. மக்களை சந்தித்து, மக்கள் இடத்திலேயே உரிமையோடு ஆதரவு பெற்று அந்த அடிப்படையில் தான் ஆட்சிக்கு வருமே தவிர கொல்லைப் புறமாக என்றைக்கும் ஆட்சிக்கு வருவதற்கு திமுக துடித்துக் கொண்டிருக்கவில்லை.

19 எம்எல்ஏக்கள்

19 எம்எல்ஏக்கள்

இன்றைக்கு என்ன நிலை நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஆளுநர் இடத்திலேயே ஆளுங்கட்சியாக இருக்க கூடிய அதிமுகவை சேர்ந்த 19 பேர்கள் இப்போது இருக்கக் கூடிய முதல்வர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, எனவே சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி நம்பிக்கை கோரக் கூடிய வாக்குகளை பெறக்கூடிய ஒரு நிலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரி இருக்கின்றனர்.

ஆளுநருக்கு கடிதம்

ஆளுநருக்கு கடிதம்

இப்படி ஒரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது. நீங்கள் கூர்ந்து கவனித்து, சிந்தித்து, ஆய்வு செய்து உடனடியாக சட்ட மன்றத்தை கூட்டுங்கள். ஒரு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று அந்த கட்சியை சேர்ந்த ஆளுங்கட்சியில் இருக்க கூடியவர்களே கடிதம் எழுதி தந்திருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த நிலைக்கு நீங்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என நானும் கடிதம் கொடுத்து இருக்கிறேன்.

எதிர்கட்சிகளும் கோரிக்கை

எதிர்கட்சிகளும் கோரிக்கை

அதைத்தொடர்ந்து சட்ட மன்றத்தில் இடம் பெற முடியாத நிலையில் இருக்கக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை எதிர்க்கட்சிளும் ஒன்று சேர்ந்து நேற்றைக்கு ஆளுநரை சந்தித்து அந்த பிரச்சனையை சொல்லிவிட்டு வந்து இருக்கிறார்கள். கடிதத்தையும் தந்து விட்டு வந்து இருக்கிறார்கள்.

தலையிட மறுப்பு

தலையிட மறுப்பு

அவர்களிடம் ஆளுநர் நான் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க முடியாது. இது கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கிற உட்கட்சி பிரச்சினை. ஆகவே இதில் நாங்கள் தலையிட முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

ஓபிஎஸ் கொடுத்த கடிதம்

ஓபிஎஸ் கொடுத்த கடிதம்

இதே நிலை ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் இந்த ஆட்சிக்கு எதிராக 10 பேரை தனியாக பிரித்து ஆளுநரை சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தார். இந்த ஆட்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உடனடியாக சட்டமன்றத்தை கூட்டுங்கள் என்று கடிதம் கொடுத்து இருக்கிறார். ஆகவே அப்போது 10 பேர் தான், அதை ஏற்றுக்கொண்டு ஆளுநர் உடனே உத்தரவிடவில்லையா?

40க்கும் மேற்பட்டோர்

40க்கும் மேற்பட்டோர்

ஆனால் இப்போது 19 பேர் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது வந்து இருக்கக் கூடிய செய்தி என்ன வென்றால் 25, 26, 27 எம்.எல்.ஏ.க்கள் என தாண்டி இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் 40 பேருக்கு மேல் ஆட்சிக்கு எதிராக போர்கொடி தூக்குகின்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.

89 பந்துகள்

89 பந்துகள்

89 பேர் கொண்டிருக்கின்ற கூடிய திராவிட முன்னேன்ற கழகத்தினுடைய பந்து வந்தால் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள். அந்த பந்தை நாங்கள் கொண்டு போறோமா? கொண்டு போகவில்லையா? என்பது ஒரு கேள்விக்குறி. இப்பவே சொல்லி விட்டால் சஸ்பென்ஸ் போய்விடும்.

மக்களின் நன்மை

மக்களின் நன்மை

அதனால் தான் நேற்றைக்கு சொன்னேன் ஆராய்ந்து, சிந்தித்து, சட்ட ரீதியாக இதை பற்றி எல்லாம் விவாதித்து அதற்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் ஒரு முடிவு எடுக்கும். ஆனால் அந்த முடிவு எங்களுடைய சுய நலத்திற்காக அல்ல, திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய சுய நலத்திற்காக அல்ல. தமிழ்நாடு மக்களுடைய நன்மைக்காக அந்த முடிவை நிச்சயமாக எடுக்கும்.

விடிவு காலம் வரும்

விடிவு காலம் வரும்

இவ்வளவு நாள் பொறுத்து இருந்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் நாள் தான். நான் கொஞ்சம் வருஷம், கொஞ்சம் மாசம் என்று கூறவில்லை...கொஞ்ச நாள் தான் சொல்கிறேன். ஆகவே விரைவிலேயே தமிழகத்திற்கு நல்ல விடிவு காலம் ஏற்படுத்தி தருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தயாராக இருக்கக் கூடிய அந்த சூழ்நிலையை நிச்சயமாக திமுக உருவாக்கி தரும் என்று நான் இந்த நேரத்திலேயே எடுத்து சொல்கிறேன்.

ஆட்சி மாற்றம்

ஆட்சி மாற்றம்

இன்னும் எவ்வளவு நாள்கள் பொறுமையாக இருப்பீர்கள் என்கிறார்கள். இது எங்கள் சுயநலத்தினால் அல்ல. மக்களின் பொதுநலத்தை கருத்தில் கொண்டு இன்னும் ஓரிரு மாதங்கள் அல்ல ஓரிரு நாள்களிலேயே ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். நிச்சயம் திருமணம் என்றால் பாயாசம் இருக்கும். தி.மு.க., திருமணம் என்றால் அரசியல் இருக்கும் என்று கூறினார்.

ஆருடம் பலிக்குமா?

ஆருடம் பலிக்குமா?

இதே ஸ்டாலின்தான் கடந்த பிப்ரவரி மாதம் கொடுத்த பேட்டியில் ஓபிஎஸ் 4வது முறையாக முதல்வராகவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். இப்போது இருவரும் இணைந்த பின்னர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எதிர்ப்பை பார்த்து இப்போது ஆட்சி மாற்றம் வரும் என்கிறார்.

முடியுமா? விடியுமா?

முடியுமா? விடியுமா?

தமிழ்நாட்டில் தமிழிசை சொல்லும் ஜோதிடமாவது பலிக்கிறது. ஆனால் ஸ்டாலின் சொல்லும் ஜோதிடம் பலிக்குமா பார்க்கலாம். ஏற்கனவே முடியட்டும் விடியட்டும் என்று நமக்கு நாமே பயணம் சென்றார். இனி ஒரு பயணம் செல்வாரா பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+