கி.வீரமணி மூத்த தலைவர்... அவரை விமர்சிக்க விரும்பவில்லை - ஸ்டாலின்
கி.வீரமணி மூத்த தலைவர், அவர் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது அவரை விமர்சிக்க விரும்பவில்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது சட்டசபையில் நடந்த சம்பவங்களை மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் விளக்கம் அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கி. வீரமணியின் அறிக்கை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு ஸ்டாலின், வி.வீரமணி வயது மூத்த தலைவர் என்று அவர் கூறினார்.
சட்டசபையில் நடந்த சம்பவம் பற்றி அறிக்கை வெளியிட்டிருந்த வீரமணி, சட்டசபையில் நடந்த அமளிகள் வரலாற்றில் தீராத கறையை ஏற்படுத்தி விட்டன. எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையோடு திமுக நின்றிருந்தால் இவ்வளவு மனவேதனையும், வெட்கப்படத்தக்க, திமுகவின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்காத என்று கூறியிருந்தார்.

பேரவைத்தலைவர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் உரியதாக இல்லை. வெட்கமும், வேதனையும்பட வேண்டிய தலைகுனிவான நிலையும் கூட. இந்தக் கட்டத்தில் கருணாநிதி சபையில் இருந்து வழி நடத்த இல்லாததால் ஏற்பட்ட நிலைமை இது என்று வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது பற்றி இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தான் கி.வீரமணியிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாக கூறினார். கி.வீரமணி வயது மூத்த தலைவர் என்றும் அவரை தான் விமர்சிக்க விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications