டெங்கு.. ஸ்டான்லி, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ஸ்டாலின் திடீர் ஆய்வு!
சென்னையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
தமிழகம் முழுவதும் டெங்கு நோய் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் அரசு மருத்துவமனைகளில் நேரில் சந்தித்தார். வடசென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது :தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தேன். ஸ்டான்லி மருத்துவமனையில் 25 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் 25 பேர் டெங்கு நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சுகாதாரப் பிரச்னை இருப்பதாகவும், நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் இல்லை என்றும் நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் தொடர்ந்து டெங்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். தமிழகம் முழுவதும் டெங்கு வேகமாக பரவி வருகிறது என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications