விறுவிறுன்னு.. சுறுசுறுன்னு... 'சரவணா ஸ்டோர்' மாதிரி பளபளவென்று ஜொலிக்கும் "மு.க.ஸ்" பக்கங்கள்!
சென்னை: முகநூல் முதல் டிவிட்டர் வரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலக்கி வருகிறார். தினசரி அப்டேட்கள், ஸ்டேட்ஸ்கள், தமிழ், ஆங்கில பதிவுகள் என மல்ட்டிபிள் கலக்கலாக இருக்கிறது ஸ்டாலினின் பக்கங்கள்.
அதை விட அவரது இணையப் பக்கத்திற்குப் போய்ப் பார்த்தால் புதிதாககத் திறக்கப்பட்ட குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் மாதிரி பளபளவென மிளிர்கிறது..
என்ன வேணும் உங்களுக்கு.. எல்லாம் இங்க இருக்கு என்று சூர்யா சொல்வது போலவே ஒரு பீலிங் பேக்கிரவுண்டில் ஓடி நிற்கிறது... அப்படி இருக்கிறது அவரது இணையதளம்.

ரூம் போட்டு தீயாய் வேலை செய்யும் குமாருகள்
தனியா ரூம் போட்டு ஒரு பெரிய டீமே வேலை பார்ப்பது தெரிகிறது நன்றாகவே. பரவாயில்லை அப்சோர்சிங் அட்டகாசமாகவே இருக்கிறது. முகநூலாகட்டும், டிவிட்டராகட்டும், இணையதளமாகட்டும் எல்லாவற்றிலும் ஒரு தொழில்முறை அப்ரோச் பளிச்சிடுகிறது.

உயிரோட்டத்துடன்
அவரது இணையதளப் பக்கம் இப்போது முன்பை விட உயிரோட்டமாக இருக்கிறது. லேட்டஸ்ட் நியூஸ், பிரஸ் ரிலீஸ், ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வுகள், புகைப்பட காலரி, அவரது கருத்து, கடிதம், அவரது பேட்டிகள், போராட்டங்கள், வீடியோ காலரி என கலக்கலாக உள்ளது இணையதளப் பக்கம். திமுக தொண்டர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளையும் படங்களையும் கூட போட்டு வைத்துள்ளனர்.

டிவிட்டர் ஜொலிப்பு
இணையதள பக்கத்தைப் பிரமிப்புடன் பார்த்து விட்டு அடுத்து "புரசைவாக்கம் சரவணா ஸ்டோருக்கு"... அதாவது டிவிட்டர் பக்கம் போனால் அது இன்னும் ஜொலிஜொலிப்பாக உள்ளது. Save water Save Earth என்ற வாசகத்துடன் அமர்க்களமாக, மங்களகரகமாக (மஞ்சள் நிறப் பின்னணியில் ஸ்டாலின்) காணப்படுகிறது கவர் போட்டோ.

992 டிவிட்கள்
992 டிவிட்களைப் போட்டு வைத்துள்ளார் ஸ்டாலின். கிட்டத்தட்ட 33 ஆயிரம் பாலோயர்கள். நிறைய டிவிட்கள், லேட்டஸ்ட் நிகழ்வுகள் குறித்த ஸ்டாலின் கருத்துக்கள், விமர்சனங்கள், வேதனைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பக்கத்தை அலங்கரிக்கின்றன.

பேஸ்புக்
அடுத்து கடைசியாக "தி.நகர் சரவணா ஸ்டோருக்கு" வருவோம்.. அதுதாங்க பேஸ்புக். இங்கும் ஸ்டாலின் பக்கம் பிரமாதமாக உள்ளது. லேட்டஸ்ட் நிகழ்வுகள் குறித்து உடனக்குடன் ஸ்டாலின் தெரிவிக்கும் கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

தமிழோடு ஆங்கிலமும்
முன்பு தமிழில் மட்டுமே கருத்துக்கள் இடம் பெறும். இப்போது ஆங்கிலத்திலும் வருகிறது. புகைப்படங்களுடன் கூடிய பதிவுகளும் நிறைய. பார்க்கவே அருமையாக இருக்கிறது.

திமுக மூன்றெழுத்து.. ஸ்டாலின் ஒரு நல் முத்து!
மொத்தத்தில் திமுக மூன்றெழுத்து.. ஸ்டாலினின் பேஸ்புக், இணையம் மற்றும் டிவிட்டர் ஆகிய மூன்றும் ஒரு நல்முத்து என்று சொல்லக் கூடிய வகையில் பளிச்சென இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications