Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலம் தொடங்கி திருவள்ளூர் வரை... நமக்கு நாமே 3வது கட்ட பயணம் கிளம்பும் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் "நமக்கு நாமே" விடியல் மீட்பு பயணம் இரண்டு கட்டங்களாக முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்டப் பயணத்தை 8 மாவட்டங்களில் அக்டோபர் 26 ஆம் தேதியன்று சேலத்தில் தொடங்கி நவம்பர் 7-ஆம் தேதி திருவள்ளூரில் நிறைவு செய்கிறார்.

சென்னையில் மக்களை சந்திக்கும் ஸ்டாலின், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், மீனவர் பகுதிகளுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு ‘நமக்கு நாமே - விடியல் மீட்புப் பயணம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மு.க. ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

குமரி தொடங்கி திருச்சி

குமரி தொடங்கி திருச்சி

கடந்த செப்டம்பர் 20ம் தேதி நாகர்கோவிலில் முதல்கட்ட பயணத்தை தொடங்கிய அவர், அக்டோபர் 2-ம் தேதி திருச்சியில் நிறைவு செய்தார். மொத்தம் 11 மாவட்டங்களில் உள்ள 74 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,750 கி.மீ. பயணம் செய்துள்ளார்.

நீலகிரி தொடங்கி கடலூர்

நீலகிரி தொடங்கி கடலூர்

தனது 2-ம் கட்ட பயணத்தை கடந்த 7-ம் தேதி நீலகிரியில் தொடங்கிய ஸ்டாலின், கடலூரில் இன்று (18-ம் தேதி) நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின்போது மாணவர்கள், சுயஉதவிக் குழு பெண்கள், விவசாயிகள், வெளிமாநிலத்தவர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகிறார்.

கோவில்களில் வழிபாடு

கோவில்களில் வழிபாடு

அனைத்து மதத்தினரையும் சந்தித்து குறைகளை கேட்கிறார். முதல்கட்ட பயணத்தின்போது திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் குடும்பத்தினருடன் வழிபட்டார். அதுபோல 2-வது கட்ட பயணத்தின்போது, தஞ்சாவூரில் பட்டாச்சாரியார்கள், குருக்கள், அர்ச்சகர்களை சந்தித்து உரையாடினார். இது சர்ச்சையை கிளப்பியது.

விமர்சனத்திற்கு

விமர்சனத்திற்கு

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘‘திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல. திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் உள்ளனர். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையை பின்பற்றி வருகிறோம். எனது பயணத்தின்போது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், சமணம் என அனைத்து மதத்தினரையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறேன். எனவே, நான் கோயிலுக்கு சென்றதில் தவறில்லை'' என்றார்.

முடியட்டும் விடியட்டும்

முடியட்டும் விடியட்டும்

சுற்றுப் பயணம் செல்லும் இடங்களில் மாணவர்கள், மகளிர், விவசாயிகள், தொழிலாளர்களை சந்தித்து பேசும் ஸ்டாலின். உங்களது உணர்ச்சி, எழுச்சியை பார்க்கிறபோது நமக்கு நாமே பயணம் எந்த அளவுக்கு வெற்றி பெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை. முடியட்டும் ஜெயலலிதாவின் ஆணவ ஆட்சி. விடியட்டும் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி. விடியல் பயணத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று கூறி வருகிறார்.

இறுதிகட்ட சுற்றுப்பயணம்

இறுதிகட்ட சுற்றுப்பயணம்

‘நமக்கு நாமே' பயணத்தின் இறுதிகட்ட பயணத்தை வரும் 26ம் தேதி சேலத்தில் தொடங்கி விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் என நவம்பர் 7ம் தேதிவரை பயணம் மேற்கொள்கிறார்.

சென்னையில் பயணம்

சென்னையில் பயணம்

இந்த சுற்றுப்பயணம் முடிந்த உடன் சென்னையில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஸ்டாலின் செல்ல இருக்கிறார். குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், மீனவர் பகுதிகள், வெளிமாநிலத்தவர்கள், தொழிலதிபர்கள், கடற்கரையில் நடைபயிற்சி செல்வோர், அனைத்து மத பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினருடன் ஸ்டாலின் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+