மு.க. ஸ்டாலினின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள் நவீன வசதிகளுடன் புதிய வடிவமைப்பு
சென்னை: நேற்று தனது 62வது பிறந்தநாளைக் கொண்டாடிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது இணையதளம், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை புதிய வடிவமைப்பு செய்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பின்னர் தமிழகத்தின் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றிருந்தபோதே, தன்னை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தனக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கி அதன் வழியாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வந்ததை தமிழகம் அறியும். தற்போது வளர்ந்துள்ள நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப மு.க.ஸ்டாலின் இணையதளம் www.mkstalin.in புதிய வடிவமைப்பினை பெற்று, அவருடைய பிறந்தநாளான இன்று (நேற்று) அவராலேயே தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. வரலாறு, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பல்துறை சாதனைகள், மு.க.ஸ்டாலின் பொதுவாழ்வு, இளைஞரணியின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல செய்திகளும், அரிய புகைப்படங்களும் இத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
தங்களின் பிறந்தநாள், திருமண நாள், குடும்ப நிகழ்வுகள், தி.மு.க.விழாக்கள், பொதுநிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே இதில் பதிவு செய்து மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை பெறலாம். பொதுமக்களும், தி.மு.க.வினரும் தங்களின் புகைப்படங்களை இதில் பதிவு செய்து மு.க.ஸ்டாலினுக்கு பார்வைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பும் இதில் உருவாக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதற்கான வாய்ப்பும், அவருடன் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உரையாடுவதற்கான வசதியும் இந்த இணையதளத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இணையதளம் வாயிலாகவும், சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் மு.க.ஸ்டாலினிடம் கல்வி-மருத்துவ உதவிகளை பெற விரும்புகிறவர்கள் இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாழ்வில் 47 ஆண்டுகளாக தன்னை இணைத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின் நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக பொதுமக்களுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்குடன் இந்த இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications