மு.க.ஸ்டாலினையே குழப்பிய "கொளத்தூர்".. திருச்சியில் வந்த தர்மசங்கடம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி பொதுக்கூட்டத்தில் அம்மா அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதை நேரடியாகவே அம்பலப்படுத்திய திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், தனது தொகுதியின் குறை தீர்ப்பு எண்ணைத் தொடர்பு கொண்டு பேச முயன்றபோது அது ஆரம்பத்தில் கிடைக்காமல் போனதால் தர்மசங்கடத்துக்குள்ளானார். ஆனால் கடைசியில் நம்பர் கிடைத்தது.

திருச்சியை அடுத்த மணப்பாறையில் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அதிமுக ஆட்சியின் அவலநிலை குறித்து செயல்முறை விளக்கத்தோடு நிரூபிக்க முயற்சித்தார் ஸ்டாலின்.

அம்மா கால் செண்டர்...

அம்மா கால் செண்டர்...

இதற்காக சமீபத்தில் மக்களின் குறைகளைப் பதிவு செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய அம்மா கால் செண்டர் எண்ணான 1100க்கு மேடையிலேயே தனது செல்போனில் அவர் தொடர்பு கொண்டார்.

கம்யூட்டர் வாய்ஸ்...

கம்யூட்டர் வாய்ஸ்...

உடனடியாக அதனைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இந்தியிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி அனைத்து தடங்களும் பிசியாக இருப்பதாக கம்யூட்டர் வாய்ஸ் கேட்டது.

இந்தியில் பதில்...

இந்தியில் பதில்...

இதைக்கேட்டு, ‘பாருங்கள் அம்மா கால் செண்டரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி பேசுகிறார்கள்' என்ற ஸ்டாலின், தனது தொகுதி உதவி கேட்கும் எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றார்.

கொளத்தூர் உதவி எண்...

கொளத்தூர் உதவி எண்...

தனது கொளத்தூர் தொகுதியில் மக்களின் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 78108 78108 என்ற எண்ணை அறிவித்துள்ளார் ஸ்டாலின். இந்த எண்ணை பகிரங்கமாக மேடையிலேயே அறிவித்த ஸ்டாலின், அதனை தொடர்பு கொள்ள முயற்சித்தார்.

தர்மசங்கடம்...

அப்போது அந்த எண்ணிற்கும் உடனடியாக தொடர்பு கிடைக்கவில்லை. முதலில் எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. இதனால் ஸ்டாலினுக்கு தர்மசங்கடமாகி விட்டது. இருப்பினும் கடைசியில் எண் கிடைத்தது.

ஸ்டாலின் டயலிங்

சொந்த செலவில் ஆப்பு !

Posted by அரசியல் நையாண்டி Political Satire on Tuesday, January 26, 2016

ரூட்ட மாத்து...

அதன் பின்னர் பேருந்து கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு என மற்ற பிரச்சினைகள் குறித்து பேச்சை தொடர்ந்தார். வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மக்கள் உறுதியாக உள்ளனர் என தனது பேச்சையும் அவர் முடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+