15 மாவட்ட செயலாளர்களை நீக்க ஸ்டாலின் அதிரடி திட்டம்! மாணவர் அணி தலைவரும் மாற்றம்?
திமுக செயல் தலைவராகி உள்ள ஸ்டாலின் அதிரடியாக 15 மாவட்ட செயலர்களை மாற்ற முடிவு செய்துள்ளாராம். அத்துடன் திமுக மாணவர் அணிக்கு புதிய தலைவரையும் நியமிக்க உள்ளாராம்.
சென்னை: திமுகவின் செயல் தலைவராகியுள்ள ஸ்டாலின் அதிரடியாக 15 மாவட்ட செயலாளர்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

15 மா.செ.க்கள் நீக்கம்
திமுகவை முழுவதும் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துட்ட ஸ்டாலின் முதல் கட்டமாக 15 மாவட்ட செயலாளர்களை மாற்ற திட்டமிட்டுள்ளாராம். சட்டசபை தேர்தலின் போது உள்ளடி வேலைபார்த்ததால் இந்த 15 மாவட்ட செயலாளர்களை நீக்க முடிவு செய்துள்ளாராம்.

சந்திக்க மறுப்பு
இது தொடர்பான தகவல் அறிந்த அந்த 15 மாவட்ட செயலாளர்களும் ஸ்டாலினை சந்திக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் ஸ்டாலின் தரப்போ அவர்களை சந்திக்க விரும்பவில்லை என தெரிவித்துவிட்டதாம்.

மாணவர் அணி தலைவர் மாற்றம்?
அதேபோல் திமுக மாணவர் அணியின் தலைவர் பதவியில் இருந்து கடலூர் இள. புகழேந்தியை நீக்கவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தம் வசம் உள்ள பொருளாளர் பதவியை வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்கவும் ஸ்டாலின் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

பொருளாளர் பதவி யாருக்கு?
பொருளாளர் பதவியை எப்படியும் பெறுவது என்பதில் துரைமுருகன், எ.வ. வேலு, திண்டுக்கல் ஐ பெரியசாமி இடையே கடும் போட்டி இருக்கிறதாம். திமுகவில் ஸ்டாலின் மேற்கொள்ளப் போகும் அதிரடி மாற்றங்கள் அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications