மு.க. ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க கோரி வைகோவுக்கு நோட்டீஸ்
சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பலி கடவாக்கப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் கருணாநிதி குடும்பத்தில் பதுங்கிக்கொண்டார்கள்.

சாகித் பால்வா (ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர்) சென்னை வந்து மு.க. ஸ்டாலினை சந்தித்தபோது என்ன பரிமாற்றம் நடந்தது? கோடிக்கணக்கான ரூபாய் பணத்திற்கு டி.டி. கொடுக்கப்பட்டது என்கிறார்களே அது யாரிடம் கொடுக்கப்பட்டது.
ஷாகித் பாவ்லா- ஸ்டாலின் சந்திப்பை சிபிஐயிடம் சொன்னார் என்பதாலேயே பெரம்பலூர் சாதிக் பாட்ஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 2ஜி விவகாரத்தில் ஸ்டாலினுக்கும் பங்கிருக்கிறது என நான் சொல்கிறேன். இதற்கும் ஒரு வழக்கை போட்டுக்கொள்ளட்டும். அந்த வழக்கை சந்திக்க நான் தயாராக இருக்கேன் என்று வைகோ கூறியிருந்தார்.
காலையில் வைகோ பேட்டி அளித்த நிலையில், மாலையில் ஸ்டாலின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ''செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீங்கள் என் கட்சிக்காரின் மான்பை குறைக்கும் வகையில் பேசியுள்ளீர்கள். இந்த நோட்டீஸை பெற்றுக் கொண்ட 3 நாள்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேனில் உங்கள் மீது வழக்குத் தொடரப்படும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, தொடர்ந்து திமுக மீது அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக வைகோ மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.

-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications