எ.வ. வேலுவை கண்டக்டர் என்று விமர்சிப்பதா.. சூப்பர் ஸ்டாரே கண்டக்டர்தானே.. ஸ்டாலின் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

Stalin slams ADMK for slamming former minister Velu
சென்னை: திமுக உறுப்பினர் எ.வ.வேலுவை சட்டசபையில் இன்று சொல்லக் கூடாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளனர். அவரை கண்டக்டர் என்று விமர்சித்தனர். கண்டக்டராக இருந்தது கேவலமா... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே கண்டக்டராக இருந்தவர்தானே என்று கேட்டுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

தமிழக அரசின் ஸ்மால் பஸ் குறித்த விவாதம் இன்று சட்டசபையில் புயலைக் கிளப்பியது.

இன்று சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ. ஸ்மால் பஸ்கள் பற்றி பேசினார். அப்போது அவர், ஸ்மால் பஸ்களில் இருப்பது இரட்டை இலை இல்லை அது இயற்கை காட்சி என்று தெரிவித்தார்.

இதை கேட்ட எ.வ. வேலு உள்ளிட்ட திமுகவினர் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அதிமுகவில் இருந்து சென்ற எ.வ.வேலுவுக்கு இது பற்றி பேச உரிமை இல்லை என்று முனுசாமி தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷமிட்டனர். உடனே அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயரர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து திமுகவினர் வெளியேற்றப்பட்டார்கள்.

இதையடுத்து வெளியே வந்த திமுகவினர் சபாநாயகர் உத்தரவை எதிர்த்துக் கோஷமிட்டனர். பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக பேருந்தா அல்லது அரசுப் பேருந்தா என்று தெரியவில்லை. இதுகுறித்து நாங்கள் தெரிவித்த நியாயமான கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்குகின்றனர். அவர்கள் பேசுவதை இடம் பெறச் செய்கின்றனர்.

இன்று சட்டசபையில் எங்களது உறுப்பினர் எ.வ.வேலுவை சொல்லக் கூடாத வார்த்தைகளால் தரக்குறைவாக விமர்சித்தனர். அவரைக் கண்டக்டராக இருந்து வந்தவர்தானே என்று கூறினர். ஏன், கண்டக்டராக இருப்பது அவவளவு கேலவமானதா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே கண்டக்டராக இருந்துதானே இன்று சூப்பர் ஸ்டாராகியுள்ளார் என்று கேட்டார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+