சபாநாயகரா.. இல்லை சர்வாதிகாரியா.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
சென்னை: சபாநாயகரை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எதிர்கட்சிகளுக்கு சபாநாயகர் மதிப்பு தருவதில்லை என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சபாநாயகர் தனபால் சர்வாதிகார அடிப்படையில் செயல்படுவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபையில் நேற்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என இன்றைய பேரவைக் கூட்டம் கூடியதும் திமுகவினர் கூறினர்.

சபாநாயகர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததை தொடர்ந்து, திருத்திய நிதி அறிக்கை மீதான பதிலுரையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சட்டப்பேரவை விவாதத்தில் சிறப்பாக பணியாற்றினோம். பேசிய பிரச்னைகளையே அமைச்சர்கள் பேசுகின்றனர். சபாநாயகரை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றார்.
எதிர்கட்சிகளுக்கு சபாநாயகர் மதிப்பு தருவதில்லை. துரைமுருகன் கருத்தை அவைக்குறிப்பில் இருந்த நீக்கிய போது, ஓஎஸ் மணியன் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சனையை மணியன் பேசினார். நாங்களும் பெங்களூரில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி பேசலாமா என வினவினோம். ஆனால் சபாநாயகர் எங்களது பேச்சை மட்டும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டதாக ஸ்டாலின் புகார் கூறினார். அந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்குவதாக் கூறி விட்டு வழங்கவில்லை. எனவே, எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications