நுங்கு சாப்பிடுகிறார்... டீக்கடையில் டீ சாப்பிடுகிறார்.. வாக்கிங் போகிறார்.. ஸ்டாலின் கலகல!
ஈரோடு: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது சூடான தேர்தல் பிரசார நெருக்கடிக்கு மத்தியிலும் வாழ்க்கையின் ஜாலியான பக்கங்களையும் தொடத் தவறுவதில்லை.
நாள்தோறும் தான் மேற்கொள்ளும் யோகா, நடைப் பயிற்சி உள்ளிட்டவற்றை அவர் போகும் இடமெல்லாம் தொடருகிறார்.
வழியில் டீக்கடை இருந்தால் நிறுத்தி டீ சாப்பிடுகிறார். டீக்கடைக்காரர், பொதுமக்களுடன் சகஜமாக பேசுகிறார். தேர்தல் பரபரப்பிலும் எதார்த்தத்தையும் அவர் தவற விடாதவராக இருக்கிறார்.

துணைவியாருடன் நுங்கு
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பிரச்சாரத்தின்போது இப்படித்தான் இளைப்பாறுதலாக தனது துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் சாலையோரம் இருந்த நுங்குக் கடை அருகே வண்டியை நிறுத்தி நுங்கு சாப்பிட்டார்.

நடைப் பயிற்சி
ஈரோட்டில் பிரசாரத்திற்குப் போயிருந்தபோது அங்கு தனிமையான இடத்தில் துண்டை விரித்து டி சர்ட் சகிதம், யோகாசானத்தில் ஈடுபட்டார்.

நாமக்கல்லில் வாக்கிங்
நாமக்கலுக்குப் போயிருந்தபோது அங்கு ஒரு தெருவில் அவர் தனது உதவியாளர்கள் புடை சூழ வாக்கிங்கும் போனார்.

கடலூரில் டீ
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, சாலையோர டீக்கடையில் தேனீர் அருந்தி அனைவருடனும் உரையாடினார்.

பருப்பு வாங்கினார்
கடலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, டிபார்ட்மென்ட் ஸ்டோரில் ஒன்றில் புகுந்து வணிகம் எப்படி நடைபெறுகிறது என்றும், வாடிக்கையாளர்களிடம் கடந்த திமுக ஆட்சிக்கும், தற்போதுள்ள ஆட்சிக்கும், விலைவாசி உயர்வை பற்றி விசாரித்தறிந்தார். பருப்புப் பாக்கெட்டை எடுத்து விலையையும் பார்த்தார்.

நெசவாளர்களிடம் குறை
ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம், பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அங்குள்ள நெசவாலை ஒன்றில் புகுந்து நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கட்சிக்காரர் வீடுகளில் தங்கல்
போகும் இடங்களில் ஸ்டார் ஹோட்டல்களில் தங்குவதை விட கட்சிப் பிரமுகர்களின் வீடுகளிலேயே அவர்கள் வீட்டுப் பிள்ளையாக தங்கி அவர்களைப் பெருமைப்படுத்துகிறார்... இது சிவகங்கையில்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications