திமுக வேட்பாளர்கள்.. ஓங்கிய ஸ்டாலின் கை- கனிமொழி பரிந்துரைத்தவர்களுக்கு 'நோ சீட்'!!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் மு.க .ஸ்டாலினின் ஆதரவாளர்கள் என்றும் கனிமொழி பரிந்துரைத்த எவரும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்காக 35 வேட்பாளர்களை திமுக நேற்று அறிவித்தது. இதில் 8 சிட்டிங் எம்.பிக்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எஞ்சிய 27 பேரும் புதுமுகங்கள்.

பழனிமாணிக்கம்
இந்த வேட்பாளர் பட்டியலில் கனிமொழி பரிந்துரைத்த எவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தஞ்சாவூர் தொகுதியை பழனி மாணிக்கத்துக்கு மீண்டும் கொடுக்க கனிமொழி கேட்டுக் கொண்டார். ஆனால் அங்கு ஸ்டாலின் ஆதரவாளர் டி.ஆர். பாலு நிறுத்தப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி செல்வநாயகம்
கள்ளக்குறிச்சியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த செல்வநாயகத்தை கனிமொழி பரிந்துரைத்தார். ஆனால் துளுவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஜெயதுரை
தூத்துக்குடி ஜெயதுரைக்கு கனிமொழி பரிந்துரைத்திருந்தார். ஆனால் தூத்துக்குடி பெரியசாமியின் மகன் ஜெகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கிய மனோ தங்கராஜூக்கு கனிமொழி வாய்ப்பு அளிக்க பரிந்துரைத்தார். ஆனால் சுரேஷ்ராஜன் ஆதரவாளரான ராஜரத்தினம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் செஞ்சி ராமச்சந்திரன்
அதேபோல் கடலூர் தொகுதியை செஞ்சி ராமச்சந்திரனுக்கு ஒதுக்க கோரினார் கனிமொழி. ஆனால் அதுவும் ஏற்கப்படவில்லை.

துர்கா ஸ்டாலின் ஆதிக்கம்?
மேலும் வட சென்னை கிரிராஜன், சேலம் உமாராணி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதற்கு ஸ்டாலின் மனைவி துர்காதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஜெ. வழக்கினால்..
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பை வழக்கை சிறப்பாக கையாண்டு வருவதால் தர்மபுரி தொகுதி தாமரை செல்வனுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக, காங்கிரஸில் இருந்தவர்கள்
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த கரூர் சின்னசாமி, திண்டுக்கல் காந்திராஜன், கன்னியாகுமரி ராஜரத்தினம் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்த நந்தகோபாலுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications