அம்பேத்கர் சிலைக்கு தொல். திருமாவளவனுடன் சேர்ந்து மாலை அணிவித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, திமுக பொருளாளர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் இணைந்து ஒரே நேரத்தில் மாலை அணிவித்தனர்.
சட்டமேதை அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர், தலித் தலைவர்கள் என கட்சி பேதமின்றி அனைவரும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் , மதிமுக பொதுச்செயலாளர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மரியாதை அணிவித்து செலுத்தினார். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த இந்த தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டினர்.

பின்னர் அனைவரும் சென்ற நிலையில் திருமாவளவன் மட்டும் அங்கு தொண்டர்களுடன் இருந்தார். அப்போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்த திமுக பொருளாளர் ஸ்டாலின் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது மேடையில் ஸ்டாலினுடன் திருமாவளவனும் இணைந்து நின்றிருந்தார். கடந்த லோக்சபா தேர்தல் வரை திமுக கூட்டணியில் இருந்த திருமாவளவன், திடீரென்று கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்று கூறி கூட்டணியை விட்டு வெளியேறினார். அவரது முயற்சியில் மக்கள் நலக்கூட்டணி உதயமானது. இந்த கூட்டணியில் மதிமுக, தேமுதிக, தமாகா இணைந்து வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஸ்டாலினும், திருமாவளவனும் நேருக்கு நேராக சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications