வருங்காலத்தில், வாட்ஸ்அப் மெசேஜுக்கும் கட்டணம் வசூலிக்கும் நிலை வரும்: ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: இணையதள சேவையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க 'டிராய்' முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் கூறியுள்ளதாவது: இந்தியாவில் பல மாற்றங்களுக்கு இணையதளங்கள் பேருதவியாக இருந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், பொருளாதார பயன்களை அனுபவிக்கவும் இந்த இணையதளங்கள் மூலம் முதல் முறையாக ஒரு நல்ல வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

வாட்ஸ் அப் கட்டணம்
ஆனால் அதிலும் இப்போது மத்திய அரசின் தொலை தொடர்பு துறையின் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு முட்டுக் கட்டைபோட முயற்சிக்கிறது. இணைய தள சேவையில் தனியார் டெலிகாம் கம்பெனிகளுக்கு முன்னுரிமை கொடுக்க டிராய் அமைப்பு முயற்சிக்கிறது. அப்படி அனுமதிக்கப்பட்டால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், யூ டியூப், இணைய தளம் மூலமான தொலை பேசி அழைப்பு உள்ளிட்ட பல அப்ளிகேஷன்களுக்கு அந்த கம்பெனிகள் தனியாக கட்டணம் வசூலிக்கும் நிலைமை உருவாகும்.

சிறு நிறுவனங்களுக்கு பாதிப்பு
இதனால் பெரும் தனியார் நிறுவனங்கள் சிறிய இணைய தள சேவை மையங்களுக்கு இடையூறு செய்தோ அல்லது அவர்களின் இணைய தள சேவையை முடக்கியோ அந்தத் தொழிலை நம்பி வாழும் எண்ணற்ற சிறு தொழில் முனைவோரை கடுமையாக பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கலாம்.

சம வாய்ப்பு சாத்தியமா
அனைத்து இணையதள சேவை மையங்களுக்கும் சம வாய்ப்பு என்ற ரீதியில் தற்போது இருக்கும் இணையதளக் கொள்கைக்கு எதிராக டிராய் அமைப்பின் இந்த முயற்சி இருக்கிறது.

கண்டனம்
மக்களுக்கு பயன் கிடைப்பதை தடுத்து, தனியார் டெலிகாம் கம்பெனிகளின் லாபத்தை கூட்ட நினைக்கும் டிராய் அமைப்பின் இந்த முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

டிராய் நிராகரிக்க வேண்டும்
தனியார் டெலிகாம் கம்பெனிகளுக்கு இணைய தள சேவையில் முன்னுரிமை அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை டிராய் அமைப்பு உடனடியாக நிராகரிக்க வேண்டும்.

நாட்டுக்கு பயன்பட வேண்டும்
இணையதள சேவை என்பது சில தனியார் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்குள் மாட்டிக் கொள்ளாமல், நாட்டிற்கும், மக்களுக்கும் பயன்படும் ஒரு நடுநிலையான சேவையாக தொடருவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று ட்ராய் அமைப்பை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications