கண்சிகிச்சைக்காக ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மருதத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள சங்கர் நேத்ராலயா மருத்துவமனைக்கு சென்றார்.

Stalina was admitted in the hospital for eye treatment

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்களில் லென்ஸ் பொருத்தினர். இதையடுத்து ஸ்டாலின் வீடு திரும்பினார்.

ஸ்டாலினை இன்றும் நாளையும் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக ஸ்டாலின் இன்று சட்டசபைக்கு செல்லவில்லை.ஸ்டாலின் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin admitted in the hospital. Stalin admitted in the sankar nethralaya hospital for eye treatment.
Please Wait while comments are loading...