எம்.எல்.ஏ சீட் கிடைக்குமா? ஆசையோடு காத்திருக்கும் நடிகர் செந்தில், பாத்திமாபாபு
சென்னை: அதிமுகவில் இதுநாள்வரை பிரச்சாரம் மட்டுமே செய்து வந்த பல நட்சத்திர பேச்சாளர்களுக்கு எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் செந்தில், செய்தி வாசிப்பாளர்கள் பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, பாடகி அனிதா குப்புசாமி ஆகிய நட்சத்திர பேச்சாளர்கள் சீட் கேட்டு விருப்பமனு அளித்துள்ளனர்.
சென்னை தொடங்கி குமரி மாவட்டம் வரை வேட்பாளர்கள் நேர்காணல் ஒரு பக்கம் போயஸ்கார்டனில் நடந்து கொண்டிருக்க நமக்கும் சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் நட்சத்திர வேட்பாளர்கள்.
அதிமுகவில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். இதில் நடிகர் வையாபுரி, ஆனந்தராஜ், செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோரும் விருப்ப மனுக்கள் அளித்தனர்.
அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு பின், மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்ட முன்னாள் டிஜிபி நடராஜனும், அதிமுக சார்பாக வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.
சென்னை மது விலக்கு காவல் உதவி ஆணையராக இருக்கும் பீர்முகமது திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். அவரைத்தொடர்ந்து சேலம் சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் கணேசன், நன்னிலம் தொகுதி மற்றும் சேலம் தெற்கு தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதனால் அவர்கள் இருவரும் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு சீட் கேட்டு விருப்பமனு கொடுத்துள்ளனர்.

நடிகர் செந்தில்
விருகம்பாக்கம் மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகளுக்கு அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார் நகைச்சுவை நடிகர் செந்தில். இத்தனை ஆண்டுகாலம் அதிமுகவில் வேட்பாளர்களுக்காக ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்த நடிகர் செந்தில் இம்முறை தனக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

விருகம்பாக்கம்
அமைப்புசாரா அணியின் மாநிலச் செயலாளர் கமலகண்ணன், மாவட்டச் செயலாளர் விருகை ரவி, பாஷா என்கிற நடிகர் விஜய்கார்த்திக் ஆகியோரும் விருகம்பாக்கம் தொகுதியில் சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்

பாத்திமா பாபு
அமைச்சர் வளர்மதியின் தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் சீட் கேட்டு செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு, பகுதிச் செயலாளர் நுங்கை மாறன், முகில் ஆகியோர் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த தொகுதியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று சிட்டிங் எம்.எல்.ஏவும் அமைச்சருமான வளர்மதி நம்பிக்கொண்டிருக்கின்றார்.

மயிலாப்பூர் தொகுதி
மயிலாப்பூர் தொகுதியை பலரும் குறிவைத்துள்ளனர். ராஜ்யசபா எம்.பியான மைத்ரேயனின் பதவிக்காலம் முடியப்போவதால் அவரும் எம்.எல்.ஏ கனவு கண்டு வருகிறார். மயிலாப்பூரைக் குறிவைத்துள்ளார். முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் மயிலாப்பூரில் போட்டியிட சீட் கேட்டு மனு கொடுத்து விட்டு நம்பிக்கையோடு இருக்கிறார்.

அனிதா குப்புசாமி
மயிலாப்பூர் தொகுதி விஐபி தொகுதியாக மாறி வருகிறது. அதிமுகவில் பாடகி அனிதா குப்புசாமி, வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், பாசறைச் செயலாளர் விஜயகுமார் ஆகியோரும் சீட் கேட்டு விருப்பமனு கொடுத்து விட்டு ஏக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நிர்மலா பெரியசாமி
வேளச்சேரி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான அசோக், ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதால், அவருக்கு இம்முறை சீட் கிடைக்காது என்கிறார்கள். பகுதிச் செயலாளர் சரவணன், மண்டலக்குழுத் தலைவர் திருவான்மியூர் முருகன், நட்சத்திர பேச்சாளரும் முன்னாள் செய்தி வாசிப்பாளருமான நிர்மலா பெரியசாமி, பரசுராமன் ஆகியோர் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

கொளத்தூர் ஜே.கே.ரித்தீஷ்
கொளத்தூர் தொகுதியில் சீட் கேட்டு மனு செய்துள்ள நடிகர் ஜே.கே ரித்தீஷ் தனக்கு சீட் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறாராம்.
கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். அதேபோல கடந்த முறை போட்டியிட்டு தோல்வியை தழுவிய மேயர் துரைசாமிக்கும் கொளத்தூரில் மீண்டும் போட்டியிட ஆசை இருக்கிறதாம்.

நட்சத்திர எம்.எல்.ஏக்கள்
அதிமுகவில் எஸ்.வி.சேகர், ராதாரவி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு எம்.எல்.ஏவாக வாய்ப்பு கொடுத்து சட்டசபைக்கு அனுப்பியுள்ளார் ஜெயலலிதா. இம்முறை பல நட்சத்திர வேட்பாளர்கள் சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். யாருக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்கிறதோ பார்க்கலாம்.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications