கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி... தேர்தல் கள நட்சத்திர வேட்பாளர்கள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 2.30 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்கிற நிலையில் நேற்று ஒரே நாளில் 233 அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்து தேர்தல் அதிகாரிகளை திக்குமுக்காட வைத்துவிட்டனர்.

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து வரும் 30ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2ம் தேதி தான் கடைசி நாள். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் ஸ்டார் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம்,
ஜெயலலிதா (அதிமுக) - ஆர்.கே. நகர்
மு. கருணாநிதி (திமுக) - திருவாரூர்
மு.க. ஸ்டாலின் (திமுக) - கொளத்தூர்
விஜயகாந்த் (தேமுதிக) - உளுந்தூர்பேட்டை
அன்புமணி ராமதாஸ்(பாமக) - பென்னாகரம்
திருமாவளவன் (விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி) - காட்டுமன்னார்கோவில்
ஓ. பன்னீர் செல்வம் (அதிமுக) - போடி
சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) - திருச்செந்தூர்
சீமான் (நாம் தமிழர் கட்சி) - கடலூர்
தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக) - விருகம்பாக்கம்
வளர்மதி (அதிமுக) - ஆயிரம் விளக்கு
கோகுல இந்திரா (அதிமுக)- அண்ணா நகர்
வசந்தகுமார் (காங்கிரஸ்) - நாங்குநேரி
கருணாஸ் (முக்குலத்தோர் புலிப் படை அமைப்பு) - திருவாடானை
சி.ஆர். சரஸ்வதி (அதிமுக) - பல்லாவரம்
விஜயதரணி (காங்கிரஸ்) - விளவங்கோடு
வசந்தி தேவி (விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி) - ஆர்.கே. நகர்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications