சாஸ் இன்றி விடியாது உலகு… கெல்லாக்ஸ் இன்றி முடியாது இரவு… இப்போ கறுப்பு பட்டியலில்
சென்னை: எங்கும் எதற்கும் சாஸ்... அதுதான் ஈஸி சட்டுன்னு எடுதோமோ சட்டியில போட்டோமா சமையல் ரெடி... இன்றைய இல்லத்தரசிகளின் சமையல் இதுதான். அம்மியில் அரைத்து சத்தாக சமைத்த இல்லத்தரசிகள் பின் அவசரமாக மிக்ஸியின் போட்டு அரைத்து வேலையை எளிதாக்கினர். அப்புறம் பாட்டில் பாட்டிலாக சாஸ் வந்தது. தக்காளி சாஸ் முதல் சில்லி சாஸ், இஞ்சி பூண்டு பேஸ்ட் என எல்லாமே பாக்கெட் ஆகி போனது. வேலையை எளிதாக்குகிறேன் என்று ரெடிமேட் மசாலாக்களுக்கும் சாஸ் பாட்டில்களுக்கும் மாறினர். விளைவு சத்துக்கள் குறைந்து போய் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எளிதாக உடலுக்குள் புகுந்தன.

நோய்க்கு இதுதான் காரணம் என்பதை அறியாமலேயே அதனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் பெரும்பாலானவர்கள். நான் உடல் மெலிய கெல்லாக்ஸ்தான் காரணம் என்று ஒரு நடிகை விளம்பரப்படுத்த அதைப்பார்த்து அழகாய் இருக்கும் இல்லத்தரசிகள் கூட இட்லிக்கு பதிலாக கெல்லாக்ஸ் சாப்பிடத் தொடங்கி உடல் மெலிகிறேன் பேர்வழி என்று நோஞ்சன்காளாக மாறுகின்றனர்.
கருப்பு பட்டியலில்
இரண்டு நிமிடவேலை என்று ( பத்து நிமிட வேலை) மேகி நூடுல்ஸ் கிண்டப்போய் இன்றைக்கு அந்த நூடுல்ஸ்சும் நொந்து போய் உள்ளது. இதேபோல உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மேலும் 500 உற்பத்தி பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
கெல்லாஸ்க்ஸ் இனி செல்லாது
இதில் டாடா ஸ்டார்பக்ஸ், கெல்லாக்ஸ், வெங்கிஸ், ரான்பாக்ஸி உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆகும். இவற்றில், டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவன பொருட்கள் மட்டும் 32 ஆகும். இவை பெரும்பாலும் சாஸ் மற்றும் சிரப்கள் ஆகும்.
கன உலோகங்கள் கலவை
இந்த 500 பொருட்களில், சர்க்கரை, காரமல், உப்பு, கன உலோகங்கள், காபின், இரும்பு கலவை ஆகியவை அதிக அளவு கலக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கெட் பாக்கெட்டாக
நகரங்களில் உள்ள உணவகங்களில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த சாஸ், ரெடிமேட் மசாலாக்கள், இன்றைக்கு கிராமங்களில் உள்ள உணவகங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைத்த கெல்லாக்ஸ் கான்ப்ளேக்ஸ் கிராமத்து பெட்டிக்கடைகளிலும் பாக்கெட் பாக்கெட்டாக தொங்கவிடப்பட்டுள்ளது.
யாருக்கு பாதிப்பு
கடந்த பல ஆண்டுகளாகவே பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து கெல்லாக்ஸ் சேர்த்து கொடுப்பது பலரது வாடிக்கையாகிவிட்டது. இப்போது திடீரென்று அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உலோகக் கலப்பு இருப்பதாக கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. ஒரு பொருளை சந்தைப்படுத்தும் முன்னபாகவே தரம் குறித்து ஆராய்ச்சி செய்ய மாட்டார்களா உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications