அரசியலில் வெற்றி பெறும் ரகசியத்தை கேட்டால் என் கூடவா என அழைக்கிறார் கமல்ஹாசன்: நடிகர் ரஜினிகாந்த்
அரசியலில் வெற்றி பெறும் ரகசியத்தை கேட்டால் தம்முடன் வாருங்கள் என கமல்ஹாசன் கூறுவதாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: அரசியலில் வெற்றி பெறும் ரகசியத்தை கேட்டால் "என் கூட வா" என அழைக்கிறார் கமல்ஹாசன் என நடிகர் ரஜினிகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
சிவாஜி எனும் மகானுடன் பழகியிருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் பெருமை. தற்போது நடைபெறுவது அரசியல், சினிமா துறை கலந்த ஒரு விழா.

அரசியலிலும் பாடம்
சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் பாடத்தை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் சிவாஜி கணேசன். தனிக்கட்சி தொடங்கிய சிவாஜிகணேசன் சொந்த தொகுதியிலேயே தோற்றுப் போய்விட்டார்.

புகழ் மட்டும் போதாது
அது சிவாஜிகணேசனுக்கு அவமானம் அல்ல. அந்த தொகுதி மக்களுக்கு நிகழ்ந்த அவமானம் அது. அரசியலில் வெற்றி பெற சினிமா பெயர் புகழ் மட்டும் இருந்தா போதாது...அதற்கு மேலே ஏதோ ஒன்னு இருக்கனும் என்கிற செய்தியை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் சிவாஜி கணேசன்.

எனக்கு தெரியாது
அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு சத்தியமாக அது தெரியாது. நடிகர் கமல்ஹாசனுக்கு அது தெரியும்னு நினைக்கிறேன்.

கூட வா சொல்கிறேன்
கமல்ஹாசனுக்கு தெரிந்திருந்தாலும் எனக்கு சொல்ல மாட்டார். ஒருவேளை இரண்டு மாதத்துக்கு முன்னால் கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ? திரையுலகில் மூத்த அண்ணன்..நீங்க .. எங்ககிட்ட சொல்லனும்னு.. சொல்லுங்க நான் உங்க தம்பி அப்படி என்று சொன்னால் "கூட வா" சொல்றேன் என்கிறார் கமல்ஹாசன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications