மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: அரசு மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘'தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி அங்கு பயிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் 1,657 தலித், பழங்குடியினர் நல அரசு விடுதிகளும், 1,305 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு விடுதிகளும் உள்ளன.
2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தங்கி, உண்டு, உறங்கி கல்வி பயிலும் இந்த விடுதிகளில் குடிநீர், கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாகவும், சுகாதாரமானதாகவும் இல்லை.
எனவே, கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
சுயநிதி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தலித் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கும் அரசாணையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அரசு நிர்ணயம் செய்ததைவிட கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications