தமிழக மீனவர் பிரச்சினைக்கு சுமூக முடிவு எட்டப்பட வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: இலங்கை கடற்படையால் தற்போது கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் உட்பட அனைத்து தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்வதற்கு மத்திய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
30.12.2015 புதன்கிழமை அன்று ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டப் பகுதியைச் சேர்ந்த 29 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத் திருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்த சமயத்தில் 2016 ஆம் ஆண்டின் புத்தாண்டின் தொடக்கத்திலேயே தமிழக மீனவர்கள் பிரச்சினை இலங்கை கடற்படையால் மீண்டும் தொடர்ந்திருப்பது இலங்கை அரசின் அராஜகப் போக்கை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த நிலை மாற வேண்டும்.மேலும் தற்போது தமிழகத்தில் பண்டிகைக் காலமாக இருப்பதால் ஏற்கனவே இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் மற்றும் தற்போது கைது செய்யப்பட்ட நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 29 மீனவர்கள் அனைவரையும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடன டியாக விடுதலை செய்வதற்கும், அவர்களது படகுகளையும் உரிய மீனவர்களிடம் ஒப்படைப்பதற்கும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே இனி வரும் காலங்களில் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதற்கும், அவர்களின் வாழ் வாதாரம் தடையின்றி தொடர்வதற்கும் மத்திய அரசு இலங்கை அரசோடு உடனடி பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவை ஏற்படுத்தி தர வேண்டும். தமிழக அரசும் இதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications