பேஸ்புக்கில் ஸ்டீபன் ஹாக்கிங்!
சென்னை: பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பேஸ்புக்குக்கு வந்து விட்டார்.
பூமிக்கு வெளியே இன்னொரு (நமக்கேற்ற) உலகம் இருக்கிறதோ இல்லையோ, குறைந்தது பேஸ்புக்கில் ஒரு "புத்திசாலி உலகம்" குடியேறியிருக்கிறது. அவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங்.
உலகின் மிகச் சிறந்த "தியரிட்டிக்கல்" இயற்பியலாளர் ஹாக்கிங். இவர் தற்போது பேஸ்புக்கில் இணைந்துள்ளார். அக்டோபர் 7ம் தேதி பேஸ்புக்கில் இணைந்த ஹாக்கிங் நேற்று முதல் பதவிட ஆரம்பித்துள்ளார்.
அவரது முதல் போஸ்ட்டில் இப்படிக் கூறியிருக்கிறார்...

தணியாத வேட்கை
இந்த அண்டம் எப்படி உருவானது என்பது எனக்கு எப்போதுமே ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கிறது. விண்வெளி உள்ளிட்ட எல்லாமே இப்போது பெரும் ஆச்சரியமான விஷயங்கள் இல்லை தான். இருந்தாலும் எனது வேட்கை தணியவில்லை.

காத்திருங்கள்
இன்று நாம் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருப்பது மிக சாதாரணமான விஷயம். அது முடிவில்லாமல் நீண்டு வருகிறது. அதில் இணைய இப்போது எனக்கும் ஒரு வாய்ப்பு. எனது பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமாக உள்ளேன். ஆர்வத்துடன் காத்திருங்கள். நானும் உடன் இருப்பேன். நல்வரவு, எனது பேஸ்புக்கை பார்வையிட்டமைக்காக நன்றியும். ஸ்டீபன் ஹாக்கிங்.

ஐஸ் பக்கெட் சவால்
இந்த முதல் பதிவைத் தொடர்ந்து இன்னும் இரு பதிவுகளையும் இட்டுள்ளார் ஹாக்கிங். அதில் ஒன்று ஐஸ் பக்கெட் சவால் குறித்தது.

நன்கொடை அளியுங்கள்
அதில், என்னால் ஐஸ் பக்கெட் சவாலை பாதுகாப்பான முறையில் நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை. அதனால் எனக்குப் பதில் அழகான இந்த மூவர் அதைச் செய்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்து விட்டு நீங்கள் தாராளமாக நன்கொடையை அளியுங்கள் என்று கூறியுள்ளார் ஹாக்கிங். (Stephen Hawking - Stephen Hawking ALS Ice Bucket Challenge | Facebook)

ஏஎல்எஸ்
இன்று உலகம் முழுவதும் இந்த ஐஸ் பக்கெட் சவால் குட்டிக் குழந்தைக்குக் கூட நன்றாக தெரியும். ALS எனப்படும்
Amyotrophic lateral sclerosis என்ற நரம்பியல் நோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக இந்த ஐஸ் பக்கெட் சவால் நடத்தப்படுகிறது. மூளையின் நரம்பு செல்களும், முதுகெலும்பில் உள்ள நரம்பு செல்களும் அழிவதால் வரும் நோய் இது. முற்றிலும் மனிதனை நடமாட்டமில்லாமல் முடக்கிப் போட்டு விடும்.

50 வருடமாக முடக்கம்.. ஆனால் சாதனை
ஹாக்கிங்கே கூட இந்த ALS நோயால் பாதிக்கப்பட்டவர்தான். தனது 21வது வயதில் இந்த பாதிப்பை அவர் சந்தித்தார். அன்று முதல் இன்று வரை அவர் நடமாட்டம் இல்லாமல், அசைவு இல்லாமல் முடங்கியிருக்கிறார். ஆனால் இந்த முடக்கத்தை வீழ்த்தி அவர் சாதித்துள்ளவை மிகப் பெரியது.

கருந்துளைகள்
இந்த அண்டம் எப்படி உருவானது என்பது குறித்து அவர் சொல்லியுள்ள விஷயங்கள் அளப்பறிய வியப்புக்குரியவை. மிக மிக விரிவானவை. Big Bang, Black holes குறித்து அவர் கொடுத்துள்ள விளக்கங்கள் அண்டத்தின் பிறப்பு குறித்த புதிய பார்வையை நமக்குள் புகுத்தியவையாகும்.

ஹாக்கிங் கதிர்வீச்சு
கருந்துளைகள் குறித்த இவரது கொள்கைகள், கோட்பாடுகள் பல திருப்பங்களைக் கொடுத்தவை. கருந்துளைகள் கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்பதை கூறியவர் ஹாக்கிங். இந்த கதிர்வீச்சுக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்றே பெயரிடப்பட்டுள்ளது.

காலத்தின் வரலாறு
General theory of Relativity மற்றும் Quantum Mechanics ஆகிய இரண்டையும் இணைத்து cosmology குறித்து விவரித்த முதல் விஞ்ஞானி இவர்தான். இவரது A Brief History of Time என்ற நூல் மிகப் பிரபலமானது. இன்று பேஸ்புக் இவரால் பிரபலமாகியுள்ளது.

மறக்காம லைக் பண்ணுங்க
மறக்காமல் அவரது பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்கள், அவருடன் தொடர்பில் இருங்கள்.. நீங்கள் வசிக்கும் இந்த அண்டம் குறித்தும், பிரபஞ்சம் குறித்தும் அழகழகான விஷயங்களை அறிய இதை விட நல்ல வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்காது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications