விபத்தில் சிக்கும் பாதயாத்திரை பக்தர்கள்: விழிப்புணர்வு அவசியம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூருக்கு பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்றினால் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு கந்த சஷ்டி விழா தொடங்கி மாசி மகம் வரை ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரை செல்வது வாடிக்கை.

அப்படி செல்லும் பலர் விபத்தில் சிக்கி கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இதனை தவிர்க்க வெள்ளை சட்டை அணிந்து செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகையில், முருகனின் அறுபடை வீடுகளில் ஓன்றான திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. பச்சை வேட்டி, பச்சை சட்டை, கறுப்பு வேட்டி, கறுப்பு சட்டை அணிந்து பக்தர்கள் தார் சாலைகளில் இரவில் நடந்து செல்லும் போது இருட்டில் தெரியாமல் வாகனம் மோதி இறக்கின்றனர்.

இந்த மாதம் மட்டும் 17 பாத யாத்திரை பக்தர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்துள்ளனர். பக்தர்கள் செருப்பு அணியாமல் நடப்பதால் தார் ரோடுகளில் மட்டுமே நடக்கின்றனர். இது வாகன ஓட்டிகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. எதிரே வேறு வாகனம் வந்தால் இன்னும் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் பல பக்தர்கள் கன்னங்களில் நீளமான வேலை குத்தி செல்கின்றனர். இரவு நேரத்தில் இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் வெள்ளை அல்லது மஞ்சள் ஆடை உடுத்தி செல்ல வேண்டும். குழுவாக செல்லுதல் நலம். வாகன விளக்கின் ஓலியை பிரதிபலிக்கும் பிரதிபலிப்பான்களை சட்டையின் முன்புறம், பின்புறம், தோல் பையிலும் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எதிரே வாகனம் வந்தால் தெரியும்.

மேலும் வாகனத்தில் வருபவர்களுக்கு எதிரே வெள்ளை, மஞ்சள் நிறங்கள் இருந்தால் இரவில் தூரத்தில் இருந்தே தெரிந்து விடும். இதனால் வாகனத்தின் வேகத்தை வெகுவாக குறைந்து செல்வர். இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும். இதன் மூலம் பாதயாத்திரை பக்தர்கள் தப்பித்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்ட போலீசாரும் பாதையாத்திரை பக்தர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+