ஸ்டெர்லைட் குழு சென்னையில் அக்.5-இல் மீண்டும் கருத்து கேட்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதா வேண்டாமா என்பது குறித்து சென்னையில் உள்ள அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினரிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடத்தப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி மீண்டும் கருத்துக் கேட்பு நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் ஆணையின்படி கடந்த மே மாதம் 28-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆய்வு செய்வதற்காக குழு அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, ஓய்வுபெற்ற ஹைகோர்ட் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குனரக என்ஜினீயரும், விஞ்ஞானியுமான வரலட்சுமி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் புதுக்கோட்டை உப்பாற்று ஓடை அருகே ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு இருப்பதை நேரில் பார்வையிட்டனர்.
நேற்று 2-வது நாளாக ஆய்வை தொடங்கினர். அவர்கள் நேற்று காலை 8.30 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றனர். அங்கு ஜிப்சம் கொட்டி வைக்கப்பட்டு இருந்த பகுதி, தாமிரதாது வைக்கப்பட்டு இருந்த பகுதி மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு இருக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுமார் 1 மணி 53 நிமிடம் ஆய்வு நீடித்தது.
இதைத் தொடர்ந்து குமரெட்டியாபுரத்தில் பொதுமக்களிடமும் கருத்துக்களை கேட்ட குழுவினர் வீரபாண்டியபுரம் சுடுகாடு பகுதி, டி,குமாரகிரி, காயலூரணி ஆகிய பகுதிகளில் உள்ள தண்ணீரை பார்வையிட்டனர். கடந்த 2 நாட்களில் ஆலையை மூடுவதற்கு ஏதுவாகவே மனுக்கள் குவிந்துள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் சென்னை வந்த அக்குழுவினர் தன்னார்வல அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றிடம் கருத்துக் கேட்பு நடத்தியது. இதைத் தொடர்ந்து வரும் 5-ஆம் தேதி மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து விதமான கருத்துகளை கேட்ட பிறகு அதை அறிக்கையாக பசுமை தீர்ப்பாயத்துக்கு இந்த குழு சமர்ப்பிக்கும்.
இதைத் தொடர்ந்து ஆலையை மீண்டும் திறப்பதா வேண்டாமா என்பதை தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவிக்கும். இந்த குழுவினரை சந்தித்து வைகோ, நல்லக்கண்ணு உள்ளிட்டோர் மனுக்களை கொடுத்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications