Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜல்லிக்கட்டு நினைவுகளை நிழலாட வைத்த ஸ்டெர்லைட் டார்ச் லைட் போராட்டம்

ஜல்லிக்கட்டு நினைவுகளை நிழலாட வைக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் டார்ச் லைட் போராட்டம் நடந்தது.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டம் இரவிலும் தொடர்ந்ததால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் செல்போன் டார்ச் லைட் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகரம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் நேற்று முதல் பல்வேறு அமைப்புகள் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

உலக தமிழர்கள் போராட்டம்

உலக தமிழர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களின் போராட்டத்துக்கு லண்டனில் உள்ள தமிழர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியை காப்பாற்று என்ற அர்த்தம் கொண்ட ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது.

ஸ்டெர்லைட் தன்னெழுச்சி

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக ஒன்று கூடியது போல் தூத்துக்குடியிலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னெழுச்சி போராட்டம் நடைபெறுகிறது. மக்கள் அலைக்கடலென திரண்டு வந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இதிலும் பிஞ்சு குழந்தைகளும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட்டின் டார்ச்லைட்

ஸ்டெர்லைட்டின் டார்ச்லைட்

நேற்றிரவு வெளிச்சமில்லாததால் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் டார்ச்லைட்டை ஆன் செய்து போராட்டம் நடத்தினர். இரவு, பகல், பாராமல் எந்த இடர்வந்தாலும் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என்பதை டார்ச்லைட் போராட்டம் பிரதிபலிக்கிறது.

நினைவாடிய டார்ச்லைட்

நினைவாடிய டார்ச்லைட்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மெரினாவில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. அச்சமயம் அனைவரும் தங்களிடம் இருந்த செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்தனர். ஒரே நேரத்தில் இந்த விளக்கு வெளிச்சம் மின்மினி பூச்சிகளை போல் இருந்தது. இதுபோல் ஸ்டெர்லைட் டார்ச்லைட் போராட்டம் ஜல்லிக்கட்டு நினைவலைகளை கொண்டு வந்துவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+