சிறப்பு பயிற்சி மையத்தின் மீது மாவோயிஸ்டுகள் தாக்க திட்டம்... சத்தியமங்கலத்தில் அதிரடிப்படை குவிப்பு
ஈரோடு: சத்தியமங்கலத்தில் அதிரடிப்படை சிறப்பு பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து வனப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
தமிழக - கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கருதப்படுவதால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர வாகன தனிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தியமங்கலம் அருகே மங்கலப்பட்டு வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், வனத்துறை மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி அளிப்பதற்காக சிறப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறப்பு அதிரடிப்படை மற்றும் காவல்துறையினர் சத்தியமங்கலம் வனப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பவானிசாகர், ஆசனூர், கடம்பூர், தாளப்பாடி ஆகிய காவல்நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு படையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் வாகனங்கள் பன்னாரி மற்றும் ஆசனூர் சோதனை சாவடிகளில் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications