For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அம்மா' போட்டோவை ஒருவர் தூக்கிப் பிடிக்க.. ஜெ. படத்துடன் கூடிய லேப்டாப்பை வழங்கிய வளர்மதி!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் மாறிய பின்னரும் கூட அதிமுகவினரும், அமைச்சர்களும், ஏன் புதிய முதல்வருமே கூட ஜெயலலிதா படத்தை விடுவதாக இல்லை.

சென்னையில் இன்று நடந்த ஒரு அரசு விழாவில் ஜெயலலிதா படமே பிரதானமாக இருந்தது, விழாவை விட. அந்த விழாவிலும் கூட மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப்களை அமைச்சர் வளர்மதி வழங்கினார். அந்த லேப்டாப்பிலும் கூட ஜெயலலிதாதான் காட்சி தந்தார்.

Still Jaya smiles in govt free laptops

சென்னை சூளை மேடு 112வது வார்டில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளியில் இன்று மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் ப.வளர்மதி வழங்கினார்.

லேப்டாப்களை வழங்கிய பின்னர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது ஒருவர் ஜெயலலிதாவின் பெரிய சைஸ் படத்தை தூக்கிப் பிடித்தபடி நின்றார். அமைச்சர் வழங்கிய லேப்டாப்களுடன் மாணவியர் நின்றனர். அவர்களது லேப்டாப்பில் ஜெயலலிதா புகைப்படம் அழகாக காட்சி தந்தது.

ஒரு முடிவாத்தான் இருக்காங்க போலயே...!

English summary
Former CM Jayalalitha is the official for the ADMK men and the ministers, it seems. In a govt function Minister Valarmathi distributed free laptops to the students, which had the Jaya image in the monitor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X